மெட்ராஸ் பட இயக்குனர்தான் ரஜினியை அடுத்து இயக்குகிறாரா? நிகில் முருகன் தகவலால் கோடம்பாக்கம் பரபரப்பு
ரஜினியின் அடுத்த படம் என்ன? போகிற போக்கை பார்த்தால் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு கேள்வி தாள்களில் கூட இப்படியொரு கேள்வி இடம் பெற்றால் ஆச்சர்யமில்லை. ‘அதாண்டா என் தலைவனோட மாஸ்…’ என்று அவரது ரசிகர்கள் குதிப்பதற்கேற்பதான் நடக்கிறது எல்லாமே! நேற்றுவரை ரஜினியின் அடுத்த படம் எந்திரன் பார்ட் 2 என்றும், அதை இயக்கப் போவது டைரக்டர் ஷங்கர் என்று தகவல்கள் பரவி வந்தது. அதற்கப்புறம் நடுவில் சுந்தர்சி கூட ரஜினியை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். ஒரு முழு நீள காமெடி படத்தில்தான் நடிப்போமே என்று ரஜினியும் விரும்புவதாக இன்னொரு தகவல் பரவியது.
எல்லா தகவலையும் மே 3 ந் தேதி இரவு பத்தரை மணி சுமாருக்கு காலி பண்ணிவிட்டார் நிகில் முருகன். கோடம்பாக்கத்தின் பரபரப்பு பி.ஆர்.ஓ! அவர் சொன்னா அது சரியான நியூஸாதான் இருக்கும் என்று உடனடியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள் சமூக வலைதள தளபதிகள். அவர் போட்டிருக்கும் ட்விட்டும் இதுதான். Nikkil Murugan @onlynikil 19m19 minutes ago Breaking News ..Sources says Attakaththi.Madras Fame Ranjith to dir#superstarrajinis next film popular prod to produce.official news soon Details
ஒரு காலத்தில் ரஜினியின் பிஆஓவாக இருந்தவர் நிகில் என்பதால் இந்த தகவல் பரப்பாகிவிட்டது. இது ஒருபுறமிருக்க, இந்த படத்தை தயாரிப்பது தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு என்பதாகவும் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. ஜுன் 6 ந் தேதி பூஜை. பொங்கலுக்கு ரிலீஸ்!
தலைவா வாருங்கள் காத்து கொண்டு இருக்கிறோம். தமிழர்களின் இதய சிம்மாசனத்தின் என்றும் குடி இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை வணங்குகிறேன்.
எங்கள் தலைவா ! எங்கள் மன்னா !! எங்கள் இறைவா!!!
தமிழ் வாழ நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்.