வெள்ள நிவாரணம்- அஜீத், விஜய் பணம் ஏதும் கொடுக்கல! விஷால் பதில்!

நெஞ்சை பிளந்து ராமன் சீதையை காட்டுகிற அனுமனாக நாம் நினைத்துக் கொண்டிருந்த பல ஹீரோக்களின் நெஞ்சில், ராமனும் இல்லை. ரசிகனும் இல்லை. ஈரமும் இல்லை. நேசமும் இல்லை என்பதை தெளிவாக்கிவிட்டு போனது நம்ம சென்னை வெள்ளம்! கொடுக்க மனசில்லாமல் முக்கி முனகியபடி அவர்கள் கொடுத்த உதவித் தொகை குறித்த வயிற்றெரிச்சல் இன்னும் பல ஏரியாக்களில் வற்றவே இல்லை.

அதற்குள் அஜீத் 60 லட்சம் கொடுத்தார். விஜய் மூன்று கோடி கொடுத்தார் என்று அவரது ரசிகர்கள் இல்லாத கதையை அவிழ்த்துவிட்டதை, “இருக்குமோ” என்ற மன நிலையிலேயே கவனித்துக் கொண்டிருந்தது மக்கள் மனசு. இந்த நேரத்தில்தான் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகளிடம் அந்த கேள்வி கேட்கப்பட்டது.

நடிகர் சங்கத்திடம் வெள்ள நிவாரண நிதியாக அஜீத்தும் விஜய்யும் எவ்வளவு கொடுத்தாங்க?

சற்று திகிலிஸ்ட் ஆனார் விஷால். மாரியாத்தாளுக்கு மேகி நூடுல்ஸ் படைச்ச மாதிரி, இதென்ன பொருத்தமில்லாத இடத்தில் பொருத்தப்படாத கேள்வி? இருந்தாலும் பதில் சொன்னார். “சில நடிகர்கள் அவங்களே நேரடியாக பல லட்ச ரூபாய்க்கு உதவிகள் செஞ்சுருக்காங்க. பட்… இவங்க ரெண்டு பேரும் நடிகர் சங்கத்தில் பணம் ஏதும் கொடுக்கல” என்றார்.

நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற…

1 Comment
  1. தாமரை says

    இந்த இருவரையும் தான், அப்பாவி ரசிகர்கள் தங்கள் தலைக்கு மேல் உட்கார வைத்து உள்ளார்கள். இந்த இரண்டு முட்டாள் நடிகனையும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் புறக்கணிக்க வேண்டும். கோடி கோடியாக பணம் பண்ண மட்டும் ரசிகர்கள் தேவை. அப்பாவி ரசிகர்கள் இப்போதாவது இந்த இரண்டு சுயனலவியாதிகளியும் பற்றி தெரிந்து கொண்டு ஒதுக்கி தள்ள வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
டேஷ் பாடல் பிரச்சனை! சிம்புவிடம் பேசிய விஷால், கார்த்தி!

எப்படியும் சிம்பு பற்றி கேள்வி கேட்பார்கள் என்று தெரிந்தே ஏற்பாடு செய்யப்பட்ட பிரஸ்மீட்டாகதான் தெரிந்தது அது. லைவ் டெலிகாஸ்ட் செய்யும் நோக்கத்தோடு சேனல்கள் குவிய, “நடிகர் சங்கத்தை...

Close