யாரும் யோசிக்காத கோணத்தில் செல்லும் கமல்!

மக்களை அசர வைத்த மாதிரி கிராம சபை!

பேரணி… பேரணியை விட்டால் மறியல்… மறியலை விட்டால் மனித சங்கிலி… நடுவில் அவ்வப்போது கிளர்ச்சி, பஸ் உடைப்பு என்று தமிழ்நாடு முழுக்க ஒரே மாதிரியான நிகழ்வுகள் நடந்து வருகிறது.

‘சிஸ்டம் சரியில்லை’ என்று ஒருவர் பொத்தாம் பொதுவாக பேசிவிட்டு சென்றுவிட, சிஸ்டத்தை எங்கிருந்து சரி செய்ய வேண்டும் என்பதை ஒரு டெமோவாகவே காட்டிவிட்டார் கமல்.

யூ ட்யூபில் வெளியான அந்த நேரடி நிகழ்வை பார்த்தவர்களால், ஒரு நிமிஷமாவது அசந்து போகாமலிருக்க முடியாது. கிராம பஞ்சாயத்துக்கு இருக்கிற அதிகாரம், அது நினைத்தால் நடத்திக் காட்டிவிட முடியும் என்கிற துணிச்சல், அந்த பஞ்சாயத்தின் கைகளுக்குள் பத்திரமாக இருக்க வேண்டிய உரிமைகள் குறித்தெல்லாம் அசல் கிராம மக்களை வைத்து நடத்தியே காட்டிவிட்டார் கமல். இந்த நிகழ்ச்சிக்கு அவர் வைத்த பெயர் மாதிரி கிராம சபை.

இந்த கிராம பஞ்சாயத்து சபையை அவர் கூட்டிய நாள், கிராம பஞ்சாயத்து ராஜ் தினம் என்பதுதான் இன்னும் கூடுதல் சிறப்பு. வருகிற மே 1 ந் தேதி தமிழகத்தின் ஏதோவொரு கிராமத்திற்கு சென்று, அங்கு நடக்கும் பஞ்சாயத்தில் கலந்து கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.

ஒரு கிராம பஞ்சாயத்து நினைத்தால், எவ்வளவு பெரிய நச்சுக்கழிவு ஆலைகளையும் கூட ஊருக்குள் வர விடாமல் தடுத்துவிட முடியும் என்பதையும் அங்கே விவாதித்தார்கள். இந்த அருமையான, முன் மாதிரியான நிகழ்வில், சட்ட பஞ்சாயத்து இயக்கம் போன்ற நாட்டுக்கு பயனுள்ள இயக்கங்களும், இன்னும் பல குழுக்களும் கலந்து கொண்டதும் கூட எக்ஸ்ட்ரா சிறப்பு.

கோட்டையின் பாரத்தை கொஞ்சம் குறைப்போம் என்கிற முழக்கத்துடன் வைக்கப்பட்டிருக்கும் இந்த திட்டம், கமலின் அரசியல் பயணத்தில் பெரும் நம்பிக்கையை விதைக்கும் என்பதில் சந்தேகமே இருக்கப் போவதில்லை. அவருக்கு பின்னால் இந்துத்வாவின் சக்தி இருக்கக் கூடுமோ என்கிற சந்தேகம் இன்னொரு புறம் விதைக்கப்பட்டு வந்தாலும், கமலின் சின்ன சின்ன முன்னெடுப்புகள், சேச்சே… அப்படியெல்லாம் இருக்காது என்கிற நம்பிக்கையையும் கொடுக்கிறது.

அந்த நம்பிக்கை ஓட்டாக மாறினால், கமல் தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தியாக இருப்பார்.

3 Comments
  1. அமீர் says

    மொத்த மீடியாவும் ரஜினியை மட்டுமே சுற்றிச் சுற்றி வரும்போது, பிழைப்பு பறிபோகும் ஆபத்திலிருப்பவர்களுக்கு எரிச்சல், ஆத்திரம் கோபம் எல்லாம் வரத்தானே செய்யும்!

    மீடியாவுக்கு எந்த நிலைப்பாடும் கிடையாது. அவர்களும் பிழைப்புக்காக எதையும் செய்பவர்கள்தானே… பரபரப்பு வேண்டும்… ஒரு பக்கம் ரஜினியை ஓஹோன்னு எழுதனும்… மறுபக்கம், விமர்சனம் அல்லது விவாதம் என்ற பெயரில் திட்டிக் கொண்டே இருக்கணும். இல்லன்னா பப்பு வேகாது. இன்னும் ஒரு வாரத்துக்கு தொலைக்காட்சிகள் ஜெ சமாதி தியானங்கள், எடப்பாடி அரசின் மோடி எடுபிடித்தனங்கள் எதையுமே கண்டு கொள்ளாமல், ராகவேந்திரா, போயஸ் கார்டன் அல்லது கேளம்பாக்கம் பண்ணை வீட்டுப் பக்கமே சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

    ரஜினி… அரசியல் – ஊடக உலகின் பிழைப்பு மந்திரம்!

    உன்னை போன்ற ஆட்கள் தான் இதுபோன்ற அநாகரிக செயல்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். உங்களை உள்ளே போட்டு நொங்கு எடுத்தால் தான் இந்தியா உருப்படும்.
    தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவோடு, தலைவர் ரஜினி அவர்கள் தமிழகத்தின் முதல்வர் ஆவதை எவனாலும் தடுக்க முடியாது.

  2. Pradeep Rajagopalan says

    Very good article after a long time.
    Kamal needs more support from people like you.

    1. தமிழரசன் says

      சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வரலாமா என்று யோசிக்கும்போதே இங்க சில பல கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் வயிறு கலக்குது.. வந்தா எப்படி இருக்கும்!! வா ராஜா நீ வா ! கண்டிப்பாக இந்த திராவிட கட்சிகளைவிடவும் ரவுடி கட்சிகளான சீமான் மற்றும்
      தைலாபுர திண்ணை பேச்சாளரை விடவும் மோசமாக நீர் ஆட்சி செய்யப்
      போவதில்லை. கண்டிப்பாக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கமே
      போதும். நாங்கள் இருக்கிறோம், உம்மை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்க.
      தைரியமாக வாருங்கள். வந்து இந்த பாழாய்ப்போன தமிழ்நாட்டு
      அரசியல்வியாதிகளிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள். காத்திருக்கிறோம்.

Cancel Reply

Your email address will not be published.

Read previous post:
அல்லு அர்ஜுன் பட நிகழ்ச்சியில் அதிர்ச்சியை கொட்டிய தயாரிப்பாளர்!

Close