அந்த நூறு பேர் லிஸ்ட்டில் முருகதாஸ் சூர்யா இல்ல!

நடிகைகள் கொத்துகிற எல்லா சீட்டிலும் ஒரு தொழிலதிபரின் படம் இருப்பதென்பது, தானாக அமைவதா? அல்லது அதுவாகவே அப்படி நடக்குதா? வெகுகாலமாக தமிழனின் உச்சி மண்டையில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த கேள்விக்கு, இதோ- அசின் தாலி கட்டிக் கொண்ட இந்த நிமிஷம் வரைக்கும் விடையே இல்லை. ஆனால் அவர்களின் நுண்ணிய பார்வையில் எப்படிதான் விழுகிறார்களோ, அந்த தொழிலதிபர்கள்? போகட்டும்… சமீபத்தில் இருப்பதிலேயே பெரிய புளியங்கொம்பை கண்டு பிடித்து, அதில் ஊஞ்சல் கட்டிய அசின்தான் பிற்காலத்திலும் வரக்கூடிய ஹீரோயின்களின் நம்பிக்கை நட்சத்திரம்.

பல நூறு கோடிகளுக்கு அதிபதியான மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபர் ராகுல்சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார் அசின். இன்று காலை அவர்களுக்கு இந்து முறைப்படி திருமணம் நடந்தது. நேற்று கிறிஸ்துவ முறைப்படியும் ஒரு திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவ்விரு திருமணங்களுக்கும் இந்தியா முழுவதுமிருந்து சுமார் 100 பேர் மட்டும்தான் கலந்து கொண்டார்களாம். மற்றவர்களுக்கு அழைப்பில்லை.

இந்த நூறு பேர்களில் அசினை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குனரோ, அவரை உச்சத்தில் கொண்டு போன இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசோ, அவருடன் டூயட் ஆடிய சூர்யாவோ இல்லை. இதிலொன்றும் ஆச்சர்யமில்லை. ரப்பர் மரம் வளரும் கேரளாவில் பிறந்தவரால், வளர்ந்து வந்த பாதையை ‘அழிச்சுட்டு’ கடப்பது பெரிய விஷயமா என்ன? இருந்தாலும், இவர்களுக்கு திருமண வரவேற்பில் கலந்து கொள்ள இன்விடேஷன் வரும் என்பது மட்டும் இப்போதைய கணிப்பு.

Read previous post:
இந்த கொடுமைக்கு இவிங்க வேற…?

இனியும் ‘தாரை தப்பட்டை’ குறித்து விமர்சித்தால், பாலாவால் வார்த்தெடுக்கப்பட்ட பிதாமகன் ஸ்டைல் ஆசாமிகள் பின் மண்டையை கடித்து வைத்தாலும் ஆச்சர்யமில்லை. இருந்தாலும் “இவிங்கல்லாம் வேலை பார்த்த படமாப்பா...

Close