சேச்சே… இவரெல்லாம் ஒரு நடிகையா?
இந்த விஷயத்தை ஸ்ரீதிவ்யா மட்டும் கேட்டிருந்தால், செத்துப்போன ஆயாவையெல்லாம் கூட அழைத்து வந்து சண்டையில் இறங்கியிருப்பார். பட்… நம்ம வாயாலதான் அவர் கேட்கணும்னு இருக்கோ என்னவோ? ஈட்டி என்ற படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அவர். இந்த படத்திற்கு ஹீரோயின் செலக்ட் பண்ண வேண்டும் என்று இறங்கிய டைரக்டர் ரவி அரசு, யார் யாரையோ மனசில் வச்சு ஸ்கெட்ச் பண்ணிக் கொண்டிருக்க, அவரது நெருக்கமான சினிமா நண்பர்கள் “ஸ்ரீதிவ்யா ஆப்ட்டா இருக்குமே?” என்றார்களாம்.
“சேச்சே… அவரெல்லாம் ஒரு நடிகையா? அவரும் அவரு பேஸ்கட்டும்… இன்னும் மேல…” என்று கூறிவிட்டார் ரவி அரசு. அதற்கப்புறம் நயன்தாராவில் ஆரம்பித்து அஞ்சலி வரைக்கும் கூட அவரது மனசு அலைபாய்ந்து கொண்டிருந்ததாம். ஆனால் விதி சும்மா விடுமா? தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், “நம்ம படத்துல ஸ்ரீ திவ்யா இருந்தா எப்படியிருக்கும்?” என்று கண்களில் ஆவல் ஒழுக ரவியிடம் கேட்க, முனியாண்டியே முட்டை பரோட்டாவுக்கு ஆசைப்படும்போது, சைவமாவது… சங்கடமாவது? “சரிங்க…” என்று கூறிவிட்டாராம் இவர்.
எல்லாம் அந்த ஒரு நாள் வரைக்கும்தான். ஷுட்டிங் ஆரம்பித்து நான்கு மணி நேரத்தை தாண்டுவதற்குள், “நல்லவேளை, வேற நடிகையை வச்சு கஷ்டப்பட பார்த்தமே? என்னமா நடிக்கறாங்க!” என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் ரவி அரசு!
இதுக்குதான் போற போக்குல மார்க் போடக் கூடாதுங்கறது?