இது நாலாவது முறை! இன்னும் திருப்தி அடையாத முருகதாஸ்

இது குழப்பமா? ஃபைன் ட்யூனா தெரியாது! ஆனால் இன்னும் தீட்டிக் கொண்டேயிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஒரு படத்தை படமாக்குவதும், பாடவதியாக்குவதும் எடிட்டிங்தான். ஒரு சுமாரான படத்தையும் சூப்பராக்கிவிட முடியும் நல்ல எடிட்டர் இருந்தால். முருகதாஸ் மாதிரி முன்னணி இயக்குனர்கள் பொறுப்பை அப்படியே வாரி எடிட்டர் தலையில் போட்டுவிட்டு போய்விட மாட்டார்கள். படத்தை வினாடிக்கு வினாடி செதுக்கிக் கொண்டேயிருப்பார்கள். சொல்பேச்சு கேட்கிற எடிட்டர் அமைந்தால் இன்னும் விசேஷம்.

சரி… கத்தியில் நடப்பதென்ன? படம் முடிந்து சென்சார் சர்டிபிகேட்டும் வாங்கியாகிவிட்டது. இருந்தாலும் படத்தை நான்காவது முறையாக உட்கார்ந்து எடிட் பண்ணிக் கொண்டிருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். இன்னும் மைண்டுக்கு திருப்தியா வரல… அது வர்ற வரைக்கும் விடமாட்டேன் என்பது அவரது பிடிவாதம்.

ஒரு நல்ல இயக்குனருக்கு இதுதான் அழகு. அதுவும் கத்திக்கு எதிராக சமூக வலை தளங்களில் பரப்பப்படும் தகவல்கள், சவால்கள் எல்லாமே அறிந்தவர் முருகதாஸ். அஞ்சானுக்கு ஏற்பட்ட கதி கத்திக்கு ஏற்படவே கூடாது என்பதில் மிக மிக உறுதியாகவே இருக்கிறாராம். அதனால்தான் இந்த நாலாவது முறை எடிட்டிங்.

தீபாவளிக்கு நான்கு தினங்களுக்கு முன்பே வர வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் விரும்பினாலும், சரியாக தீபாவளி தினத்தன்றுதான் திரைக்கு வருகிறதாம் கத்தி. இதை நம்மிடம் உறுதி படுத்தினார் கத்தி தயாரிப்பாளர் கருணாமூர்த்தி.

விஜய் ரசிகர்களுக்கு தீபாவளியும் பட்டாசும், தியேட்டர்களில் இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
புற்று நோய் சிறுவன்: போலீஸ் கமிஷனாராக்கி கனவை நிறைவேற்றிய போலீஸ் அதிகாரிகள்

ஹைதராபாத்தில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த 10 வயது சிறுவன் சாதிக் ஒருநாள் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். மரணத்தில் வாசலில் உள்ள அந்த சிறுவனின் கனவை ஹைதராபாத் காவல்துறை ஆணையர்...

Close