மாத சம்பளத்துக்கு ரஜினி மகள்? அத்தனைக்கும் ஆசைப்படு தத்துவம்ஸ்!
விளையாட்டில் கூட ராணி வேஷம் போடுகிறவர்களால்தான் பிற்காலத்திலும் தலைமை பொறுப்புக்கு வர முடியும் என்கிறது மனுஷ சைக்காலஜி. ஆனால் ஒரு ராணி மகா ராணியே எந்த ஆபிசில் வேலை தருவார்கள் என்று யோசித்தால், ராணி எப்போ சிம்மாசனத்தில் அமர்வது? இந்த கேள்வி ரஜினி ரசிகர்களுக்கு இதுவரை வராமலிருந்தால் கூட, இந்த செய்தியை படித்தால் வரும். வந்தே தீரும்!
வேறொன்றுமில்லை… சுல்தான் தி வாரியர் படம் தயாரிக்கும் போது அதன் முடிவு இப்படியாகும் என்று அவரே நினைத்திருக்க மாட்டார். அதற்கப்புறம் அதே படத்தை மேலும் கொஞ்சம் டச் பண்ணி கோச்சடையான் ஆக்கும் போது கூட அதன் ரிசல்ட்டை முன் கூட்டியே அறியாதவர்தான் சவுந்தர்யா ரஜினி. ஆனால் அதற்கப்புறம் மீண்டும் சினிமா தயாரிக்க வேண்டும். அது கிராபிக்ஸ் இம்சைகள் இல்லாத வழக்கமான ஸ்டைலில் உருவான சினிமாவாக இருக்க வேண்டும் என்றெல்லாம் முயற்சிக்காமல், ஈராஸ் நிறுவனத்தில் தென்னிந்திய தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டு அமைதியாகிவிட்டார். அதுவும் சில காலம்தான். அங்கிருந்து மீட்கப்பட்டு வெளியே வந்தார் அவர்.
சரி… இனிமேல் நல்ல கதை ஒன்றை தேர்வு செய்து விஜய் சேதுபதியோ, சிவகார்த்திகேயேனோ… யாருடைய கால்ஷீட்டையாவது பெற்று பிரமாதமான ஒரு படத்தை தயாரித்து, சினிமாவில் விட்ட குறையை விடாமல் பிடித்து நிறையாக்கி தீர வேண்டியதுதானே? மீண்டும் ஒரு நிறுவனத்தில் உட்கார்ந்துவிட்டாராம். இந்த முறை அவர் பொறுப்பில் விடப்பட்டிருக்கும் படமே அவரது அப்பா ரஜினியின் படம்தான். இன்னும் புரியலையா? தாணு தயாரிக்கும் ரஜினி படத்தில் நிர்வாக பொறுப்புகளை கவனிக்கும் பொறுப்பில் அமர வைக்கப்பட்டிருக்கிறார் சவுந்தர்யா ரஜினி. இவருக்கு மாத சம்பளம் பேசப்பட்டிருப்பதாக ஒரு தகவல்.
சிறகு முளைக்கட்டும்… அது வானத்தையே மறைக்கட்டும்… நல்லா தொழில் கத்துக்கோங்க!
ALL THE BEST.