நம்பர் நடிகையால் நாசமாய் போன இன்னொரு ஹீரோ! ஹ்ம்ம்ம்.. தற்கொலை முயற்சியாம்?
தமிழ் திரையுலகமே கிடுகிடுத்துப் போய் கிடக்கிறது. நேற்று மாலை வெளி மாவட்டங்களிலும், இன்று காலை சென்னையிலும் வெளியாகியிருக்கும் குமுதம் ரிப்போர்ட்டரின் கவர் ஸ்டோரிதான் இந்த கிடுகிடுப்புக்கு காரணம். ‘அரசியல் வாரிசு… நம்பர் நடிகை… காதல் மோதல் தற்கொலை முயற்சி’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் அந்த செய்தி, நாலு சுனாமி, ஒரு எரிமலைக்கு சமம்!
அப்படியென்ன சாராம்சம் அந்த கட்டுரையில்? நம்பர் நடிகைக்கும் அரசியல் வாரிசான ஹீரோ ஒருவருக்கும் இடையே காதல் வந்துவிட்டதாம். ஆனால் வழக்கம் போலவே தன்னை காதலிப்பவர்களையெல்லாம் ‘சேது’வாக்கிவிட்டு வேடிக்கை பார்க்கும் வழக்கமுள்ள நம்பர், இந்த முறையும் அப்படியே செய்ய காதல் வலி தாங்க முடியாமல் உறக்க மாத்திரைகளை முழுங்கிவிட்டு உலகத்தை விட்டே பறக்க நினைத்திருக்கிறார் வாரிசு. நல்லவேளையாக அவருக்கு நெருக்கமான சினிமா ஹீரோ ஒருவர் அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிவிட்டார். இப்படி போகிறது அந்த கட்டுரை. மருத்துவமனை ரிப்போர்ட் கைக்கு வந்து, அதை நன்றாக உறுதி படுத்திக் கொண்ட பிறகுதான் இந்த நியூஸ் எழுதப்பட்டதாக கூறுகிறார்கள் பத்திரிகை வட்டாரங்களில். அது மட்டுமல்ல, இந்த ரகசிய செய்தி தெரிய வந்ததும் ஒரு ஸ்பெஷல் டீமே இந்த சம்பவத்தை ரகசியமாக விசாரித்ததாம்.
தான் காதலிக்கும் நடிகையின் பின்னணி என்ன? அவரால் பாதிக்கப்பட்டவர்களின் லிஸ்ட் எவ்வளவு நீளமானது? என்பதையெல்லாம் தெரிந்தும் கூட இப்படி குழியில் விழுந்து கோக்குமாக்காகி போயிட்டாரே என்று வாரிசுக்காக கவலைப்படுகிறது திரையுலகம்.
அதே நேரத்தில் அவருக்கு நெருக்கமான விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில ஹீரோக்கள் மட்டும், இந்த செய்தி எப்படிடா வெளியில போச்சு? அந்த ஆஸ்பிடல் காரனுங்க கவுத்துட்டானுங்களே… என்று சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது கோபமாக இருக்கிறார்களாம்.
ஒரு கல்லும் ஒரு கண்ணாடியும் மோதிக் கொண்டால், சேதம் கண்ணாடிக்குதானே? இனிமேலாவது கண்ணாடி மனச்சுக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.