சந்தானம் அலட்டல்! சலுகை தந்த உதயநிதி

தான் நடிக்கும் படத்தின் பிரஸ்மீட்டோ, பாடல் வெளியீட்டு விழாவோ, எதுவாக இருந்தாலும் சந்தானத்தை அழைத்து வருவதென்பது ஏழு மலை, நாலு காடு தாண்டிப்போய் புலிப்பால் கறந்துட்டு வருவதற்கு சமம். ஏன்னா அவரு பாலிஸி அப்படி. அங்கு வந்து டைம் வேஸ்ட் செய்யும் அந்த நேரத்தில் ஒரு படத்தில் நடிக்க அரை நாள் கால்ஷீட் கொடுத்தால் கூட கல்லா பெட்டி நிறையுமே என்பதுதான் இந்த ஜில்லா பட்டி ஜமீனின் கொள்கை. சில தயாரிப்பாளர்கள், ‘அந்த ஒரு நாள் சம்பளத்தை கூட வாங்கிக்கோங்க. ப்ளீஸ் வந்துருங்க’ என்று கெஞ்சினாலும் கூட, பாலிசியை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை என்பது அவரது வாடிக்கை.

இன்னும் சில தினங்களில் நடைபெறவிருக்கும் ‘நண்பேன்டா’ படத்தின் பாடல் வெளியீட்டுக்கு சந்தானம் வருவாரா? இதுதான் பெரும்பான்மை நிருபர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. காரணம்…? படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆச்சே. பொதுவாகவே ரெண்டு பேரும் நிஜத்திலும் நண்பேன்டாதான். அப்படியென்றால் இந்த பாடல் வெளியீட்டு விழாவுக்கு அவர் வருவதுதானே முறை?

விழணும்னு முடிவெடுத்துட்டா, பல்லி பாத்திரம் கண்டுச்சா, பல்லாங்குழி கண்டுச்சா? ‘நண்பேன்டா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வர முடியுமான்னு தெரியல. ரொம்ப பிசியா இருக்கேன்’னு சொல்லிவிட்டாராம் சந்தானம். அவர் சொன்னதில் ஒன்றும் பொய் கலந்திருக்கவில்லை என்பதை முன்பே அறிந்தவர்கள்தான் நண்பேன்டா டீம். ஏனென்றால் படத்திற்கு சந்தானம் டப்பிங் பேச வேண்டும். எப்போது கூப்பிட்டாலும், நான் அந்த படத்தின் ஷூட்டிங்கில் இருக்கேன், இந்த படத்தின் ஷுட்டிங்கில் இருக்கேன் என்று சொல்லிக் கொண்டேயிருந்தாராம் சந்தானம்.

கடைசி கடைசியாக சந்தானம் அவரே ஹீரோவாக நடிக்கும் பெயர் வைக்காத படம் ஒன்றுக்காக பாண்டிச்சேரியில் ஷுட்டிங்கில் இருக்கிறார். ‘நீங்க டப்பிங் பேச சென்னைக்கு கூட வரவேண்டாம். நான் அந்த செட்டப்பை அப்படியே அனுப்புறேன். பாண்டிச்சேரியிலேயே டப்பிங் பேசிக் கொடுங்க’ என்று இங்கிருந்து ஒரு பெரிய செட்டப்பை அனுப்பி வைத்தாராம் உதயநிதி. இப்படி உதயநிதிக்கு கூட உரியநேரத்தில் உதவா நிதியாகதான் செயல்பட்டிருக்கிறார் சந்தானம். இருந்தாலும், தன் பொன்னான நடிப்புக்கு ஒரு நாள் லீவு போட்டுவிட்டு ‘நண்பேன்டா’ ஆடியோ ரிலீசுக்கு வருவதாக உறுதியளித்திருக்கிறாராம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிசாசு ஹிட்…! ஆனால் படம் பார்க்காமல் புறக்கணிக்கும் பாலா?

இரண்டு வித்தைக்காரர்கள் ஓரிடத்தில் இருந்தால், நத்தை முதுகில் நண்டு ஏறிய கதையாகதான் முடியும். பாலா தயாரிக்கும் படத்தை மிஷ்கின் இயக்குகிறாரா...? அப்படின்னா தனியா அவங்களே ஒரு ஆக்ஷன்...

Close