‘ஓம் நமச்சிவாய!’ ரஜினி , அஜீத்… அப்புறம் ஒரு மேக்கப்மேன்!
‘ஓம் நமச்சிவாய!’ ரஜினி , அஜீத்… அப்புறம் ஒரு மேக்கப்மேன்! இந்த தலைப்பில் வெளியான புத்தாண்டு தின செய்தியில் அஜீத் விவகாரம் அடுத்த நாள் தொடர்கிறது… என்று கூறியிருந்தோம் அல்லவா? https://wh1049815.ispot.cc/rajith-than-ajith/
இதோ அது-
லிங்காவுக்கு பின் ரஜினியின் அடுத்தப்பட அறிவிப்பு வர சற்றே தாமதம் ஆனதைதான் நாடு அறியுமே? நடுவில் லிங்காரவேலன் அண் கோவினரின் குழப்பத்தால் அப்செட் ஆகியிருந்தார் ரஜினி. விரைவில் ஒரு குதிரைப்பாய்ச்சல் நடத்த வேண்டும் என்று திட்டமிட்ட அவர், அதற்கான மும்முரத்தில் இருந்த நேரத்தில்தான் மேக்கப் மேன் சரவணனுக்கு ஒரு அழைப்பு. அழைத்தவர் அஜீத்.
இவரை எதற்காக அவர் வரச்சொன்னார்? வேறொன்றுமில்லை. ஷாம்லியின் சினிமா பிரவேசம், கிட்டதட்ட புதுமுக அறிமுகம் போலவேதான் நடக்கிறது இந்த முறை. வெளிநாட்டில் தங்கியிருந்து தனது படிப்பை முடித்துவிட்டு திரும்பி வந்த ஷாம்லி, நல்ல கதையம்சமுள்ள படங்கள் வந்தால் மீண்டும் நடிக்கலாமே என்று நினைக்க, மனைவியின் தங்கை என்பதாக மட்டுமல்ல, மற்றுமொரு மகள் போலவே ஷாம்லியை கவனித்து வரும் அஜீத் அவருடைய சினிமா கேரியருக்காக தனது நேரத்தையும் சிறிதளவு ஒதுக்க ஆரம்பித்தார்.
ஷாம்லி எந்த படத்தில் மீண்டும் நடிக்க ஆரம்பிக்க வேண்டும்? அவருக்கு மேக்கப் மேன் யார்? ஹேர் டிரஸ்சர் யார்? மேனேஜர் யார்? என்பதிலெல்லாம் தனது அனுபவத்தை கொண்டு தேட ஆரம்பித்தார். அப்போது கிடைத்தவர்தான் மேக்கப் மேன் சரவணன். பொதுவாக அஜீத்திடம் பணியாளராக சேர்வதென்பது, அரசாங்க வேலை கிடைத்த மாதிரி. சம்பள விஷயத்தில் ஆரம்பித்து, சலுகை போனஸ் கொடுப்பது வரை எல்லாவற்றையும் நிறைவாக செய்து தருவார். இந்த விஷயம் கோடம்பாக்கத்தில் திரியும் ஈ எறும்புகளுக்கு கூட தெரிந்த சங்கதி. அஜீத் அழைக்கிறார் என்றதும் சரவணனும் சென்று சந்திக்க, அந்த முதல் சந்திப்பிலேயே பிளாட் ஆனார் இந்த மேக்கப்மேன்.
ரஜினி சார் போலவே அஜீத் சாரும் ரொம்ப நல்லவர். அவரே வர்றீங்களான்னு கேட்ட பிறகு, யோசிக்கறதுக்கு அவசியமேயில்லை. சேர்ந்துவிட வேண்டியதுதான். மனசு கட்டளையிட, மறுநாளே சேர்ந்துவிட்டார் ஷாலியின் மேக்கப் மேனாக!
ஷாம்லியின் நடிப்பில் வேகமாக வளர்ந்து வருகிறது வீர சிவாஜி.