தேவையில்லை அதிர்ச்சி! இதுதான் நடிகர் விக்ரமின் நிஜமுகம்!
தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டு கபடி. ஏஷியன் கேம்ஸ் வரைக்கும் கபடி கொண்டாடப்பட்டாலும், இன்னமும் கிரிக்கெட் போல, ஹாக்கி போல, பேட்மிட்டன் போல முன்னறே முடியாதளவுக்கு ஃபேஷனில் பின்தங்கியிருக்கிறது. இதையெல்லாம் உடைத்தெறியும் விதத்தில், ஜெயா தொலைக்காட்சியில் தனியார் நிறுவனம் ஒன்று பெண்களுக்கான கபடிப்போட்டி சீரியலை நடத்தியது. சுமார் 300 வாரங்கள் திட்டமிடப்பட்ட தொடர் அது.
கபடியை பிரபலப்படுத்தும் நோக்கத்தில், முன்னணி ஹீரோ ஹீரோயின்களிடம் ‘இந்த கபடி தொடர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்று ஒரு வார்த்தை சொல்ல வைத்து அதை ஒளிபரப்ப நினைத்தார்கள். நடிகர் கார்த்தி, ஜி.வி.பிரகாஷ், சிம்பு, பிரசன்னா உள்ளிட்ட பலரும் ஆர்வத்தோடு முன் வந்து வாழ்த்துக்களை சொன்னார்கள். ஆனால் சீயான் விக்ரம் என்ன கேட்டார் தெரியுமா? ‘இப்படி நான் வாழ்த்து சொன்னா எனக்கு என்ன லாபம்? பணம் தருவீங்களா?’ என்றார். விக்ரமை சந்தித்து வாழ்த்து கேட்க போன மூத்த பத்திரிகையாளர், ‘அடப்பாவி’ என்று புலம்பாத குறையாக திரும்பினார். இத்தனைக்கும் சம்பந்தப்பட்ட நிருபர், விக்ரமின் பேட்டிகளை பல்வேறு முன்னணி இதழ்களில் எழுதி அவரை பெருமைப்படுத்தியவர். இதுதான் விக்ரமின் நிஜ முகம்.
இதோ- அந்த முகத்தை இன்னும் கிழித்திருக்கிறது இன்றைய நக்கீரன் இதழ். அதில் பிரபல கதைவசனகர்த்தா கலைஞானம் எழுதிவரும் தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே.
இன்று முன்னணி நடிகராக உள்ள விக்ரம் நாயகனாக அறிமுகமானது ‘தந்துவிட்டேன் என்னை’ என்ற படத்தில்தான். ரோகிணிதான் இதில் அவருக்கு ஜோடி. இயக்குநர் ஸ்ரீதர் உடல் நலம் குன்றி, மரணத்தின் விளிம்பில் இருந்த போது விக்ரம் முதல் நிலை நடிகராகிவிட்டிருந்தார் (இந்த நிலைக்கு வர அவர் பட்ட பாடுகள் சாதாரணமானதல்ல!). இதுகுறித்து கலைஞானம் நக்கீரன் பத்திரிகையில் எழுதியிருப்பதாவது: சில வருடங்களுக்குப் பிறகு தி.நகர் வீட்டை விற்றுவிட்டு அடை யாறு பக்கம் குடியேறினார் ஸ்ரீதர். அதன்பின் கை, கால் செயல்படாமல் இருந்து… இறந்தும் விட்டார். திரையுலகமே சென்று ஸ்ரீதருக்கு அஞ்சலி செலுத்தியது. நானும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினேன்.
அப்போது சோகமயமாக நின்றிருந்த ஸ்ரீதரின் ஒன்றுவிட்ட தம்பியும், பிரபல டைரக்டருமான சி.வி.ராஜேந்திரன் என்னிடம் வந்தார். “விக்ரமை ஹீரோவா அறிமுகப்படுத்தி ‘தந்துவிட்டேன் என்னை’ படம் எடுத்தார். அதில் பெரும் நஷ்டம். வட்டிக்கு மேல் வட்டி ஏறி… பெரும் மன உளைச்சலில்தான் அவரை நோய் தாக்கியது. கை, கால் விழுந்து விட்டது. பாருங்க… அவர் இறப்புக்கு எல்லாரும் அஞ்சலி செலுத்தினாங்க. ஆனா.. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட விக்ரம் வரலை. இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க…” என வேதனைப்பட்டார்.
“ராஜேந்திரன் சார்… ஏத்திவிட்ட ஏணியை எட்டி உதைக்கிற பலரை நான் என் அனுபவத்தில் பார்த்திருக்கேன். அதேபோல ஏத்திவிட்ட ஏணி மரத்தை தெய்வமாக கொண்டாடுனவங்க… அண்ணன்மார்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்கள்தான். இதுவும் என் அனுபவம்தான்” என அவரை ஆசுவாசப்படுத்தினேன்.
-இவ்வாறு கலைஞானம் எழுதியுள்ளார்.