நன்றி மறவா ரஞ்சித்! வியக்கும் நண்பர்கள்…
கொஞ்சம் மேலே போனால் போதும்… கீழே குனிந்து பார்ப்பது தனது பரம்பரைக்கே கேவலம் என்பதை போல நடந்து கொள்வார்கள் பலர். அதிலும் சினிமாக்காரர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். நன்றி என்ற சொல்லுக்கு விதவிதமாக அகராதி போடுவார்கள். இப்படி புள்ளி வைக்காமல் கோலம் போடும் புண்ணியவான்கள் வாழுகிற ஏரியாவில்தான் பா.ரஞ்சித்தின் ‘பழசு மறவா கொள்கை’ பலரையும் நெக்குருக வைத்திருக்கிறது.
ரஜினியை வாழ்நாளில் ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட மாட்டோமா என்று கனவிலும் நினைவிலும் தவித்து வந்தவர்களை அவர் படத்திலேயே பங்கு பெற வைப்பது எவ்வளவு பெரிய வரம்? அதற்கு அவர்கள் கொடுத்து வைத்திருந்தது என்ன தெரியுமா? அதை தெரிந்து கொள்ள ஒரு மின்னல் வேக பிளாஷ்பேக் அவசியம்…
இன்றைய தினத்தில் ரஜினி படத்தில் பணியாற்றும் டெக்னீஷியன்கள் அத்தனை பேரும் இந்தியா முழுக்க அறிந்தவர்களாகவும், சம்பளத்தை கோடிகளில் வாங்குகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் ரஜினியின் புதிய படத்தில் அந்த நிபந்தனைகள் எதையும் வைக்கவில்லை ரஜினி. அது அவரது பெருந்தன்மை என்பது ஒரு புறம் இருக்கட்டும்… இந்த படத்தில் தன்னுடன் அட்டக்கத்தி படத்தில் பணியாற்றிய பலரையும் உள்ளே கொண்டு வந்திருக்கிறார் பா.ரஞ்சித். அந்த படம் உருவான நேரத்தில் ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் ஒத்துழைத்தார்களாம் அத்தனை பேரும். அதற்கப்புறம் அவர்களை தன் எல்லா படங்களிலும் தவறாமல் பயன்படுத்தி வரும் ரஞ்சித், இந்த படத்திலும் ரஜினியிடம் அனுமதி கேட்டு அவர்களையே பயன்படுத்திக் கொண்டாராம்.
அதுமட்டுமல்ல, அதில் சிலரை ரஜினியை சந்திக்க நேரிலும் அழைத்துப் போயிருக்கிறார்.
பணம் புகழ் வந்தாலும் குணம் மாறா பா.ரஞ்சித்துக்கு பாராட்டுகள்!
எல்லா துறையிலும் நன்றி மறவாத ஆத்மாக்கள் இருக்கத்தான் செய்கின்றன…
MY BEST WISHES TO OUR STYLE SAAMRAAT