பெய்டு க்ரிட்டிக்ஸ்! விமர்சித்தவர்கள் மீது உதயநிதி உர்…

மத்தளத்துக்கு மட்டும்தான் ரெண்டு பக்கம் இடி! இந்த சினிமா விமர்சகர்களுக்கு திரும்புகிற பக்கமெல்லாம் இடி! நல்லாயிருக்கு என்று எழுதினால், துட்டு எவ்ளோ வாங்குன மாப்ளே என்பார்கள். நல்லாயில்லேன்னா துட்டு வர்லீயா மாப்ளே என்பார்கள். அட மீடியமா எழுதி வைக்கலாம்னா, என்னவோ போப்பா. வாங்குன கொஞ்ச காசுக்கு கொஞ்சமா சொம்படிச்சுருக்கே என்பார்கள். க்ரிட்டிக்ஸ் கண்டிஷன் இப்படி க்ரிட்டிக்கல் சுச்சுவேஷனில் இருக்க, நிஜமாகவே எரிச்சல் பட்டிருக்கிறார் உதயநிதி.

சமீபத்தில் அவர் நடித்து திரைக்கு வந்திருக்கும் படம் கெத்து. விமர்சகர்களின் பார்வையில் இப்படம் மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது. முதலிடம் ர.மு. இரண்டாமிடம் க.க. நான்காமிடம் தா.த. இந்த உண்மையை சொல்லும் விமர்சகர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வந்து திட்டி தீர்த்திருக்கிறார் உதயநிதி. அவர் ஒருவரை குறிப்பிட்டு எழுதியிருக்கிறாரா, அல்லது கெத்துவை கிழித்த எல்லாரையும் எழுதியிருக்கிறாரா என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், எரிச்சலில் இருக்கிறார் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

நான் விமர்சகர்களுக்காக படம் எடுக்கவில்லை. படம் பார்க்க வரும் மக்களுக்காகதான் என்று கூறியிருக்கும் அவர், படத்தில் வருகிற ‘பார்’ சண்டைக்காட்சியின் முதல் குத்து, பணம் வாங்கிக்கொண்டு விமர்சனம் எழுதும் டுபாக்கூர் விமர்சகர்களுக்கு’ என்றும் கூறியிருக்கிறார்.

இன்னும் கெத்து படத்தின் ஆக்ஷன் மூடிலிருந்து விலகி வரவில்லை போலிருக்கிறது! ஸோ சேட்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆளுக்கொரு அவதூறு! சிவகார்த்திகேயனை குளோஸ் பண்ண சதியா?

ஒரேயடியா ‘ஒசரத்துக்கு’ போயிருக்கிறார் சிவகார்த்திகேயன். மெரீனாவில் ஆரம்பித்து பொங்கலுக்கு வந்த ‘ரஜினி முருகன்’ வரைக்கும் அவர் நடித்த படங்கள் எல்லாமே ஹிட்! ஒருபுறம் இனிப்பு, மறுபுறம் கசப்பு...

Close