அழகாக சேலை கட்டு, அசத்தலான பரிசை வெல்லு….

புதுமையின் பிறப்பிடமாகவும், இளமையின் உறைவிடமாகவும் திகழ்வது ஸ்ரீபாலம் சில்க்ஸ் சாரீஸ் நிறுவனம். ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலத்தின் போது புத்தம் புதிய டிசைன்களில் பட்டுப் புடவைகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தி வருகிறது ஸ்ரீபாலம். அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகைக்கு மொத்தம் 5 ரகத்தில் நவீன பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுமட்டுமல்லாது பாலிவுட் திரையுலகிலும், ஸ்ரீபாலம் சில்க்சின் பங்களிப்பு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் மீனா கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே அணிந்து நடித்த சேலைகள் எல்லாம் ஸ்ரீபாலம் சில்க்சின் தயாரிப்புகளே…
இதன் தொடர்ச்சியாக வரும் தீபாவளிக்கு ஷாருக்கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளிவரவுள்ள ஹேப்பி நியூ இயர் திரைப்படத்திலும் தீபிகா படுகோனே அணிந்து நடிக்கும் சேலைகளிலும் ஸ்ரீபாலம் சில்க்சின் பங்களிப்பு உள்ளது. வெள்ளித்திரை நட்சத்திரங்களை ஜொலிக்க வைக்கும் ஸ்ரீபாலம் சில்க்ஸ், தமிழக இளம்பெண்களை பாலிவுட் கதாநாயகிகள் போல் ஜொலிக்க வைக்க முடிவு செய்து நடத்தும் போட்டிதான் இந்தியாவாலே டான்ஸ் போஸ்.
சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் செப்டம்பர் 21-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற வண்ணமிகு விழாவில் ஏராளமான இளம்பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். விதவிதமான டிசைன்களில் உருவாக்கப்பட்ட சேலைகளை அணிந்தபடி மேடையில் வலம் வந்த அவர்கள், வித்தியாசமான டான்ஸ் போஸ்களை அளிக்கவும் மறக்கவில்லை.
இதுகுறித்து ஸ்ரீபாலம் சில்க்ஸ் நிறுவனர் திருமதி.ஜெயஸ்ரீரவி பேசுகையில், ” ஆண்டுதோறும் ஸ்ரீபாலம் சில்க்ஸ் சாரீஸ் சார்பில் சில்க்லைன் என்ற ஆடை அலங்கார திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் இந்தி நடிகர் ஷாருக் கலந்து கொண்டு பெருமைப்படுத்தினார். இந்த ஆண்டும் அந்த பந்தம் தொடர்கிறது. இந்தியாவாலே டான்ஸ் போஸ் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் வரும் அக்டோபர் 3-ந் தேதி நடைபெறும் சில்க்லைன் விழாவில் ஷாருக் கலந்து கொள்வார்” என்றார்.
போட்டியின் விதிமுறைகள் என்னவென்றால், அழகான சேலை அணிந்தபடி வித்தியாசமான டான்ஸ் போஸ் ஒன்றை புகைப்படமாக எடுத்து அதனை ஸ்ரீபாலம் சில்க்சின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நாடு முழுவதும் இருந்து வரவேற்கப்படும் புகைப்படங்களில் யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அவருக்கு அக்டோபர் 3-ந் தேதி நடைபெறும் விழாவில் ஷாருக்கான் கையால் மகுடம் சூடும் வாய்ப்பு கிடைக்கும். ஸ்ரீபாலம் சில்க்ஸ் இணையதளத்தில் இந்தியாவாலே டான்ஸ் போஸ் போட்டியில் பங்கேற்க இன்று துவங்கி அக்டோபர் 2-ந் தேதி நள்ளிரவு வரை போட்டிக்கான காலக்கெடு ஆகும்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பத்திரிகையாளர்களை அசிங்கப்படுத்துவதா? தமிழ்த் திரையுலக அமைப்புகளைச் சேர்ந்த நபர்களுக்கு ஊடகவியலாளர்கள் கண்டனம்!

சினிமாவை விட பல பயனுள்ள பொழுதுபோக்குகள் வந்து விட்டன என்று தமிழக மக்கள் நினைக்க ஆரம்பித்து இருக்கும் இந்த சூழலில், தமிழ் சினிமாக்கள் , தொழில் நுட்பக்...

Close