பாபநாசம் பாப்பா நாசம்?

பாபநாசம் படத்தில் கமலின் நடிப்பை வியந்த மாதிரியே இன்னொருவர் நடிப்பையும் வியந்து போற்றிக் கொண்டிருக்கிறது மீடியா. தியேட்டர்களில் கூட அந்த பெண்ணை கண்டால் அவ்வளவு உற்சாகமாகிறார்களாம் ரசிகர்கள். காரணம்? அந்த நடிகையின் மிடுக்கு அப்படி. மலையாளத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஆஷா ஷரத் என்ற பெண்மணியை அப்படியே அழைத்து வந்து தமிழிலும் நடிக்க வைத்துவிட்டார்கள்.

தாய்மையின் உணர்வையும், போலீசின் கடமையையும் தன் முகத்தில் சட் சட்டென மாற்றிக்காட்டும் அந்த பெண்மணியை (பெண்ணா? பெண்மணியா?) பார்த்து கமல் வியந்ததில் வியப்பேயில்லை. உடனே தன் அடுத்த படத்திலும் அவரையே நடிக்க வைத்திருப்பதுதான் இப்போது முக்கியமான விஷயம்.

கமல் நடிப்பில் விறுவிறுவென உருவாகிக் கொண்டிருக்கும் தூங்காவனம் படத்தில் கமலுக்கு மனைவியாக நடிக்கப் போவது ஆஷா ஷரத்தேதான். கமல் படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடித்தாலும், உதட்டை மட்டும் ஊர்லேயே வச்சுட்டு வந்தால்தான் தப்பிக்க முடியும். ஆஷாவின் உதட்டுக்கு யார் பாதுகாப்போ?

‘ஆமாம்… தலைப்பை ஏன்யா இப்படி வச்சே?’ என்று பொங்கும் கமல் ரசிகர்கள், ஆஷா ஷரத்தின் நிலைமையை நினைத்து அனுசரித்துக் கொள்ள வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read previous post:
நயன்தாரா பார்வைக்கே போன நயன்தாரா வீடியோ! அப்புறம் என்னாச்சு?

ஓபாமாகவே இருந்தால் கூட, ‘உட்காரு மச்சி கொஞ்ச நேரம்...’ என்றழைத்து ஒரு கிண்டல் வீடியோவை காண்பித்து டென்ஷன் ஆக்கிவிடுவார்கள் போலிருக்கிறது வாட்ஸ் ஆப் அரக்கர்கள். தமிழக தலைவர்களில்...

Close