தடை நீங்கியது! சிரிப்பு நடிகர் சோகம் சொன்னபடி வரப்போகும் பாபநாசம்!

‘ஆத்தா ஏர்றதுக்கு ஆளா இல்ல?’ என்பது மாதிரி, திரையுலகம் தன் வெறும் வாயை மெல்வதற்கு வசதியாக வாரத்திற்கொரு பிரச்சனை சிக்கிக் கொள்கிறது. இந்த வாரம் சிக்கியவர் கமல்! நேற்று காலை கூடிய திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, அவரது பாபநாசம் படத்தின் வெளியீட்டுக்கு திடீர் தடை விதித்துவிட்டது. இத்தனைக்கும் சென்னையில்தான் இருந்தார் கமல். ஏனிந்த தடை என்பதற்கான காரணத்தை நமது இணையத்தில் நேற்றே எழுதியிருந்தோம்.

இரவு ஒன்பது மணியளவில் கூட்டம் நடத்திய முக்கியஸ்தர்களுக்கு போன். எதிர்முனையில் கமல்.

‘எந்த பிரச்சனையா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம். எல்லாரும் கிளம்பி ஷுட்டிங் நடக்கும் ஈசிஆர் ஸ்பாட்டுக்கு வந்துருங்க’ என்றார். அதற்கப்புறமும் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அவசரம் அவசரமாக கிளம்பிய விநியோகஸ்தர் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கமலின் ‘தூங்காவனம்’ படப்பிடிப்பில் இருந்தார்கள். ஷாட்டை முடித்துவிட்டு வந்த கமல், அவர்களின் பிரச்சனையை விலாவாரியாக கேட்டு முடித்தாராம். ‘லிங்குசாமிக்கு கொடுத்த வாக்குறுதியை மீறப்போவதில்லை. நிச்சயம் அவருக்கு அந்த படத்தை முடித்துக் கொடுப்பேன். இதை எழுத்துப்பூர்வமாக தரவும் தயாராக இருக்கிறேன். ‘பாபநாசம்’ படம் திட்டமிட்டபடி வரட்டும்’ என்று கூறினாராம்.

அப்புறமென்ன? ‘வரட்டும்…’ என்று இவர்களும் பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள். இந்த பிரச்சனை துவங்கிய சற்று நேரத்திலேயே, ‘கமல் ஒழிஞ்சாரு. நம்ம படத்தை ரிலீஸ் பண்ணிடலாம்’ என்று சந்தோஷப்பட்ட ஒரு சிரிப்பு நடிகர், பிள்ளையாருக்கு கொடுத்திருந்த ரகசிய வாக்குறுதியை காப்பாற்றும் பொருட்டு 108 தேங்காய்க்கு ஆர்டர் கொடுக்க கிளம்பிவிட்டாராம்.

பட்… விதி இஸ் பர்பெக்ட்லி ஸ்டிராங் தென் புள்ளையார்.

Read previous post:
நடிகர் சங்க பிரச்சனை! கண்டுகொள்ளாத கமல் ரஜினி? முணுமுணுக்க ஆரம்பித்திருக்கும் துக்கடா நடிகர்கள்

‘என் சங்கத்து உறுப்பினரை அடிச்சது எவண்டா?’ என்று கேட்பதற்கு மன்சூரலிகான் மாதிரி முத்துக்காளைகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சங்கத்தையே தோளில் தாங்க வேண்டிய ரஜினி கமல் அஜீத்...

Close