சீதா நடிக்கும் படத்திற்கு பார்த்திபன் குரல்! நடக்கும் நாடகமென்ன…
மனித நேயத்திற்கு மற்றுமொரு பொலிவை இந்த வெள்ளத்தின் போது தந்த நடிகர்களில் பார்த்திபனும் ஒருவர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்களும், வெள்ளம் வடிந்தபின்பு அப்பகுதி மக்களுக்கு மருந்து மாத்திரைகளும் வழங்கி சென்னைவாசிகளின் உள்ளத்தில் அழுத்தமாக பதிந்துவிட்டார் அவர். மறுபடியும் கலைப்பணி அழைக்குமல்லவா? அழைத்தேவிட்டது.
ஏஎம்ஆர் ரமேஷ் இயக்கிய ‘ஒரு மெல்லிய கோடு’ படத்தின் ஆரம்பத்தில் வாய்ஸ் ஓவர் கொடுப்பதற்காக அவர் அழைக்கப்பட்டாராம். சந்தோஷமாக போய் பேசிவிட்டு வந்திருக்கிறார். அங்குதான் ஒரு ஆச்சர்யம். இந்தப் படத்தில் மிக முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார் அவரது முன்னாள் மனைவி சீதா. படத்தின் இயக்குனர் ரமேஷ், சீதாவின் வீட்டு மாடியில்தான் வாடகைக்கு குடியிருந்தார். அந்த நட்பின் அடிப்படையில் இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்தவர், இன்னொரு உத்தரவாதமும் கொடுத்திருக்கிறாராம். அது?
உங்க பொண்ணு கீர்த்தனாவுக்கு நானே நல்ல மாப்பிள்ளையா பேசி முடிச்சு வைக்கிறேன். அந்த கல்யாணத்துல நீங்களும் பார்த்திபனும் ஒண்ணா நிப்பீங்க என்பதுதான் அது. அதற்கான முதல் முயற்சிதான் இந்த வாய்ஸ் ஓவரோ என்று சந்தேகம் எழுப்புகிறது சினிமாவுலகம்!
அப்படியே இன்னொரு தகவல்- சசிதரூர்- சுனந்தா புஷ்கர் விவகாரம்தான் இந்த கதை என்று முதலில் செய்தி பரப்பப்பட்டது அல்லவா? இப்போது சல்மான்கான் பிளாட்பார வாசிகள் மீது கார் ஏற்றிக் கொன்ற விவகாரம்தான் இந்த கதை என்கிறாராம் ரமேஷ். ஒரு படத்துக்குள்ள எத்தனை சம்பவம்தான்யா வச்சிருப்பீங்க?