“பட்டய கிளப்பும் பசங்க”

பிரபல இயக்குநர் வினயன் தமிழில் இயக்கிய “காசி” “என் மன வானில்” “அற்புதத் தீவு” ஆகிய படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியவர் அனூப்ராஜ். இவர் இயக்கும் முதல் படம் “பட்டய கிளப்பும் பசங்க”
திறமையுள்ள இளம் இயக்குனர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களை ஊக்குவித்து வரும் வித்தியாசமான தயாரிப்பாளர் ரூபேஷ் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.
புதுமுகங்களாக மூன்று ஹிரோ, மூன்று ஹிரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சஜின் வர்கீஸ், ’நியூ செந்தில்’ பாஷாணம் சாஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் குறித்து இய்க்குநர் அனூப்ராஜ் கூறுகையில், ‘சுயபுத்தி இல்லாமல் பிறர் சொல்புத்தியால் வாழ்க்கையத் தொலைத்த மூன்று இளைஞர்களைப் பற்றிய கதை இது. பணம் சம்பாதிக்கும் ஆசையில், கையில் இருக்கும் பணத்தையும், கடன் வாங்கிய பணத்தையும் பறிகொடுக்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு கோடி ரூபாய் பணத்தை ரிசார்ட் ஒன்றில் முதலீடு செய்து பண இழப்பு மட்டுமின்றி, பெரும் சிக்கலிலும் மாட்டிக் கொள்கிறார்கள்.
அதிலிருந்து இவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள்? என்பதை நகைச்சுவையாகச் சித்தரிக்கும் படம்தான் ‘பட்டய கிளப்பும் பசங்க’ என்று அனூப்ராஜ் கூறினார். முழுநீள காமெடி, ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
தயாரிப்பு – ரூபேஷ் குமார் புரொடக்‌ஷன்ஸ்
படத்தின் தலைப்பு – பட்டய கிளப்பும் பசங்க
பாடல்கள் – சோழன், விவேக் மனோகர்
இசை – ஷகீன் அப்பாஸ்
பின்னணி பாடகர்கள் – ஜோதி கிருஷ்ணா, அமிர்தா
மக்கள் தொடர்பாளர் – C.N.குமார்
கலை இயக்குனர் – அஜித் கிருஷ்ணா
நடன இயக்குனர் – போப்பி
சண்டைப்பயிற்சி – புரூஸ்லீ ராஜேஷ்
வசனம் – R.மோகன்
எடிட்டர் – A.R.ஜிபீஷ்
ஒளிப்பதிவு – ராரிஷ் G
தயாரிப்பு – ரூபேஷ் குமார்
கதை, திரைக்கதை, இயக்கம் – எம்.ஆர்.அனூப்ராஜ்
நடிகர்கள்
லிமு ஷங்கர்
மானவ்
ஷம்சீர்
சஜின் வர்கீஸ்
மனோபாலா
முத்துக்காளை
பாஷாணம் ஷாஜி
N.வேணு
ஜூபி
நடிகைகள்
கல்பனா
ரினிராஜ்
கனகலதா
ரேகா

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இதென்னடா ஓவியாவுக்கு வந்த சோதனை?

மேலேயிருக்கும் படத்தை பார்த்தாலே தெரிந்திருக்கும். ஓல்டு நடிகர் சரவணன் ஓவியாவை லவ்ஸ் விடுகிறார் என்பது. நிச்சயம் இது கனவுக்காட்சியாக இருக்கும். அல்லது நிஜ காட்சியாக இருந்தால்தான் என்னவாம்?...

Close