ஒரு கை கொடுத்தார் அஜீத்! மறு கை கொடுத்தார் பவன்கல்யாண்!
ஏற்றமோ, இறக்கமோ? நல்லதோ, கெட்டதோ? படு பாதாளத்தில் இருந்த பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு மீண்டும் கை கொடுத்து கப்பலில் ஏற்றியவர் அஜீத் மட்டும்தான்! கால்ஷீட் தருகிறேன் தருகிறேன் என்று பல வருஷமாக இவரை ஏமாற்றியே வந்தார் விஜய். அந்த நேரத்தில் கூட அஜீத் வீட்டு வாசலை மிதிக்கவில்லை ரத்னம். ஏன்? அதற்கு காரணம் பழங்காலத்தில் ஏற்பட்ட பாழும் பஞ்சாயத்து ஒன்று.
ஆனால் அஜீத்தே தேடி வந்து கால்ஷீட் கொடுத்தார். அதற்கப்புறம் பட்ட மரம் தழைத்தது. பாதாளக் கிணறு சுரந்தது. இன்று மீண்டும் தமிழ் தெலுங்கு சினிமாவில் தலை நிமிர்ந்து நிற்கிறார் ஏ.எம்.ரத்னம். இருந்தாலும் வண்டி ஒரே வேகத்தில் ஓடாதல்லவா? அஜீத் ரத்னம் இடையிலான தொழில் முதலீட்டில் ஒரு சின்ன இடைவெளி. (அல்லது கோடாலி) மீண்டும் விஜய்யிடம் கால்ஷீட் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஏ.எம்.ரத்னம். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் கால்ஷீட்டுகள் ஏற்கனவே அவர் வசம் இருக்கிறது. இந்த நிலையில்தான் அதிர்ஷ்டம் அவர் கேட்காமலே ஆன் த வே- யில் வந்து கொண்டிருக்கிறது. அது?
விஜய்யிடம் கால்ஷீட் கேட்டு வந்த எஸ்.ஜே.சூர்யா, இங்கு சாம்பார் வேகாமல் தெலுங்கு தேசத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறார். இவருக்கு ஆந்திராவின் கலெக்ஷன் ஸ்டார்களில் ஒருவரான பவன் கல்யாண் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இங்கு வெளிவந்து பெரிய ஹிட்டடித்த வேதாளம் படத்தை எஸ்.ஜே.சூர்யாதான் ரீமேக் பண்ணப் போகிறார். சொந்தக்கதையை படமாக்கலாம் என்று போன சூர்யாவுக்கு பவன் கல்யாணின் கண்டிஷன் சற்றே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. வேதாளம் படத்தை ரீமேக் செய்வதன் மூலம் அப்படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னத்திற்குதான் லாபம்.
இங்கு அஜீத்திற்கு எப்படியொரு கொள்ளை லாப வியாபாரமோ, அதற்கு சற்றும் சளைத்ததல்ல பவன் கல்யாண் வியாபாரமும்!
கரும்பு காட்டுல கற்கண்டு விளைஞ்ச மாதிரி இன்னும் சந்தோஷமாக இருக்கிறார் ரத்னம்!
NO. 1 SELFISH GUY AJINTH