அஜீத் யாரை கை காட்டுகிறாரோ? அவர்தான் அடுத்த சி.எம்! பிரபல ஆன்மீக வாதியின் பிடிவாத’ ப்ரடிக்ஷன்!

காவி உடை இல்லை. கலவர தாடி இல்லை. நெற்றியில் பட்டை இல்லை. நெடு நீள நாமமும் இல்லை. ஆனால் கரை வேஷ்டிகளும் தொழிலதிபர்களும் ‘பொத் பொத்’தென காலில் விழுகிறார்கள். கடந்த பல வருடங்களாக அருள் வாக்கு சொல்லி வரும் பழநி அசோக்ஜியின் அதிரடிகளில் ஒன்று, 2015 ன் வெள்ளத்தை முன் கூட்டியே கணித்து ‘சென்னை மக்களே… தப்பிச்சு ஓடுங்க’ என்று வாட்ஸ் ஆப்பில் எச்சரித்ததுதான். ஜெ.மரணம், வர்தா புயல் ஆகியவற்றையும் முன் கூட்டியே கணித்தவர் அசோக்ஜி.

ரஜினியின் ஆன்மீக அரசியல், கமல்ஹாசனின் அதிரடி அரசியல். மற்றும் தமிழக அரசியல் நிலவரம் எப்படியிருக்கும்? என்ற கேள்வியோடு அவரை சந்தித்தோம்.

ஆன்மீக அரசியல் என்ற ஒன்று இல்லவே இல்லை. ஆன்மீகம் என்பது ஆன்மாவை உணர்வது. ரஜினிகாந்த் நினைத்து சொல்வது போல, கோவில், தெய்வம் என்பதெல்லாம் பக்தி மார்க்கம். இதுவும் அதுவும் ஒன்றல்ல. அரசனும் ஆண்டியாவான் என்பதுதான் ஆன்மீகம். ஆண்டி அரசன் ஆகவே மாட்டான்.

சரி… ரஜினி கமலின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்? யாருக்கு முதல்வராகும் யோகம் இருக்கிறது?

இப்போதைய முதல்வர் எடப்பாடி மார்ச் மாதத்திற்குப் பின் ஆட்சியில் தொடர்வது இயலாத காரியம். விரைவில் பொதுத் தேர்தல் வரும். அப்போது அதிமுக வில் இருக்கும் பிளவுகள் மறைந்து தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகள் ஒன்றாகும். அதே போல திமுக வில் இருக்கும் மறைமுக பிளவுகளும் மறைந்து எல்லா கோஷ்டிகளும் ஒன்றாவார்கள். ஆனால் இனி தமிழகத்தை ஆளப்போகிற யோகம் நடிகர்களுக்குதான் இருக்கிறது. இன்னும் ஏராளமான நடிகர்கள் அரசியலுக்கு வருவார்கள்.

ஏராளமான நடிகர்கள் என்றால் விஜய் அரசியலுக்கு வருவாரா?

நிச்சயம் வருவார். ஆனால் அவரால் வெல்ல முடியுமா என்பது சந்தேகம்.

அஜீத் அரசியலுக்கு வருவாரா?

(பலமாக சிரிக்கிறார்) அவர் விரும்புகிறாரோ இல்லையோ? அரசியல் அவரை இழுக்கும். வருகிற பொதுத் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் அஜீத்தின் பங்கு நிச்சயம் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் அஜீத் யாரை கை காட்டுகிறாரோ, அவர்தான் தமிழகத்தின் முதல்வராக வருவார்.

அப்படியென்றால் அவர் ரஜினி அல்லது கமல் இருவரில் ஒருவரை ஆதரிப்பார் என்கிறீர்களா?

பொறுத்திருந்து பாருங்கள்…

சரி, பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் பி.ஜே.பி ஆட்சியை பிடிக்குமா?

வாய்ப்பே இல்லை. அடுத்து இந்தியாவை ஆளப்போவது காங்கிரஸ்தான். பிரதமர் மோடியே ஒரு வருஷத்திற்குப் பின் ஆட்சியில் நீடிக்க முடியாது.

அதிரடியாக போட்டுத் தாக்கும் அசோக்ஜி சொன்ன மேலும் சில தகவல்கள்….

வரப்போகிற ஆறு மாதங்களுக்கு தமிழகம் வறட்சியின் பிடியில் தத்தளிக்கும். அதற்கப்புறம் ஆறு மாதங்கள் சூழும் தண்ணீரால் தத்தளிக்கும். 2019 க்கு பின் தமிழகம் பசுஞ்சோலையாக மாறும். புதிய முதல்வர்… புதிய ஆட்சி… புதிய தமிழகம் என்று வளமான எதிர்காலம் காத்திருக்கிறது மக்களுக்கு.

– ஆர்.எஸ்.அந்தணன்

2 Comments
  1. கார்த்திக் says

    பிஜேபி ஒன்டி ஆட்சிய புடிக்கட்டும்.. அப்புறம் இரிக்கி

  2. Mani says

    அட போப்பா, அஜித் தன் பொண்ணு ஸ்கூல் போட்டில வெக்கபட்டுக்கிட்டு ஒரு டயர் வண்டி ஓட்ட முடியாம தடுமாறுறார். இவரா பப்ளிக்ல வந்து அரசியல் செய்ய போறார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிவா மனசுல கப்ஸா! இப்படி சொல்லி தப்பிச்சுருவாங்க!

Close