சிம்பு மீது மக்கள் மதிப்பும் மரியாதையும் வச்சுருக்காங்களாம்? வக்கீல்தான் சொல்றாருங்க!

அந்த பீப் ஸாங், சிம்புவின் எதிர்காலத்திற்கு ஒரேயடியாக சங்கு ஊதிவிடும் போலிருக்கிறது. நாலாபுறத்திலிருந்தும் டேஷ் டேஷ் வார்த்தைகளால் அவருக்கு அர்ச்சனை பண்ணி வருகிறார்கள். கொடுக்கு நாக்குல இருக்கு என்பதை இந்த நேரத்திலும் கூட புரிந்து கொள்ள முடியாத சிம்பு, “ஆமாம்… அது என்னோட பர்சனல். அதுல தலையிட ஒருத்தனுக்கும் உரிமையில்லை” என்று திமிர் பேட்டி ஒன்றை அளித்து, தீக்குச்சியை விழுங்கியிருக்கிறார்.

விஷால் அணி செய்வது நிவாரணப்பணி. இவர் செய்வதோ நிர்வாணப்பணி. அவரும் நடிகன். நீயும்தான் ஒரு நடிகன்! சே… தூ… என்றெல்லாம் காமெண்டுகள் பறக்கிறது வாட்ஸ் அப்புகளில். சிக்கிக் கொண்ட தலையை முக்கி முனகியாவது வெளியே எடுத்துவிட வேண்டும் என்று நினைத்த சிம்பு, கடந்த சில நாட்களாக நல்ல வக்கீல் ஒருவரை தேடி சல்லடை போட்டு வந்தாராம். சரியான வக்கீலைதான் அவர் கண்டு பிடித்திருக்கிறார்.

அந்த வழக்கறிஞர் இன்று வெளியிட்டிருக்கும் விளக்கம்தான் இது-

“இணையத்தில் தற்போது பரவலாக உலவி வரும் ‘பீப்’ சாங்” என்ற பாடலின் வரிகள் அதிகாரப்பூர்வமான பாடல் வரிகள் அல்ல. மேலும் இவ்வரிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவதை அறிந்து எனது கட்சிக்காரர்கள் சிலம்பரசன் மற்றும் அனிருத் ஆகியோர் அதிர்ந்து போயுள்ளனர்.

எனது கட்சிக்காரர்களின் மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்பையும், நற்பெயரையும் தகர்க்க வேண்டும் என்ற தீயநோக்கோடும், தவறான எண்ணத்தோடும் சில விஷமிகள் இந்தப் பாடலை இணையத்தில் கசிய விட்டிருக்கிறார்கள் என்பது என் கட்சிக்காரர்களின் வலுவான அபிப்பிராயம் ஆகும். இது குறித்து, இணையத்தில் உலவி வரும் இந்தப் பாடல் பதிவேற்றப்பட்ட மூலத்தையும் அதன் அதிகாரத்தையும் ஆராய்ந்து, கண்டறிந்து, சட்டப்படி அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, என் கட்சிக்காரர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நடிகர் சிலம்பரசன் ஒரு இசைப்பிரியர் ஆவார். அவர் பல்வேறு பாடல்களைத் தன் சொந்தப் பயன்பாட்டிற்காக ஒலிப்பதிவு செய்துள்ளார். இவையாவும், அதிகாரப்பூர்வமற்ற, திருத்தப்படாத முதல்படிவ நிலையிலேயே உள்ளன. இவை நூறு விழுக்காடு அவரது தனிப்பட்டச் சொத்தாகும். அவரது தனிப்பட்டச் சொத்துகளிலோ, அந்தரங்கத்திலோ தலையிடுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை. மேலும் அவ்வாறு செய்வது சட்டப்படி, தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்” என்று அவர் கூறியிருக்கிறார்.

நோ கமென்ட்ஸ்!

1 Comment
  1. THIRUMURUGAN says

    இந்த இரு அயோக்கிய பசங்களும் / சமுதாய விரோதிகளும் தார்மிக மன்னிப்பு / வருத்தம் தெரிவிக்கும் வரையில் இவர்களை பற்றி செய்தியோ / புகைப்படமோ போடாமல் இருந்தால் அதுவே குறைந்த பட்சம் தமிழ் சமுதாயத்திற்கு ஓரளவு நன்மை பயக்கும்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மணிரத்னமே இறங்கியாச்சு! சுபிட்சத்தை நோக்கி சூர்யா நகர்?

‘மக்களோடு ஒட்டி ஒழுகல்’ என்ற தத்துவத்தின் நேர் எதிரி என்கிற பிம்பம் கொண்ட டைரக்டர் மணிரத்னத்தையே இந்த வெள்ளம், ‘வடிய’ வைத்துவிட்டது. இந்த வெள்ளத்தில் மக்களை பற்றி...

Close