அஜீத் படத்திற்கு இடையூறு செய்தாரா பேரரசு?

சற்றே லேட்! ஆனால் செய்தியை கேட்டதிலிருந்தே கிறுகிறுத்துப் போயிருக்கிறது அஜீத் வட்டாரம்! “அவரா இப்படி பண்ணினார்? அவருக்கு நம்ம தல அவ்ளோ பண்ணினாரே? அவர் நடித்த படத்திற்கு இப்படியா கடைசி நேரத்தில் கட்டைய போடுவது?” என்று அவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்க, “விஷயம் என்னங்க?’’ என்று புலம்புவோர் மத்தியில் விசாரித்தால், அவ்வளவு தகவலும் ஃபுல் டிராஜடி…!

‘வேதாளம்’ ரிலீஸ் கொண்டாட்டத்திற்கு உலகம் முழுக்க இருக்கிற அஜீத் ரசிகர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டிருந்த நேரத்தில்தான், தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கடிதம் போனது. அதை எழுதியவர் டைரக்டர் பேரரசு. அதில் தனக்கு வேதாளம் படத் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சில லட்சங்கள் பணம் தர வேண்டியிருப்பதாகவும், அதை வாங்கிக் கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்யும்படியும் கேட்டிருந்தாராம் பேரரசு. அந்த தொகை கிட்டதட்ட பத்து லட்சம் என்கிறார்கள். வேறு வழியே இல்லாமல் ஏ.எம்.ரத்னத்தை சங்கம் நெருக்க, சரி… எவ்ளோ பிரச்சனையிருக்கு. இருந்தாலும் அவருக்கு பணம் கொடுத்துடுறேன் என்று அன்றைய தின பஞ்சாயத்தில் அந்த பணத்தையும் இணைத்து செட்டில் செய்தாராம் ஏ.எம்.ரத்னம்.

அஜீத்தின் ‘திருப்பதி’ படத்தை இயக்கியவர் பேரரசுதான். அவருக்கே தெரியாமல் படத்தில் தனக்கும் ஒரு ரோல் அமைத்துக் கொண்டு பைட்டெல்லாம் போட்டு அஜீத் ரசிகர்களை ஏகத்திற்கும் டென்ஷன் ஆக்கியவர் அவர். அதற்கப்புறம் இவரை அவர் கண்டுகொள்வேதேயில்லை. இந்த நேரத்தில் பேரரசு வேதாளத்திற்கு கட்டையை போட்டதுதான் அஜீத் வட்டாரத்தை அதிர வைத்ததாம்.

அதற்கப்புறம் நடந்ததுதான் செம காமெடி. இந்த பக்கம் பணத்தை வாங்கிய தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஐங்கரன் நிறுவனம் ஒரு கடிதம் கொடுத்தது. அதில், பேரரசு எங்களுக்கு பத்து லட்சம் பணம் தர வேண்டியிருக்கு. அதனால் அதை அப்படியே எங்க கணக்குக்கு மாத்துங்க என்று கூறப்பட்டிருந்தது. என்னாச்சு அப்புறம்?

பணத்தை ஐங்கரனுக்கு மாற்றிவிட்டுவிட்டு அமைதியாகிவிட்டது சங்கம். வாயில நுரை தள்ற அளவுக்கு போவுதே பண விவகாரம்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நடிகை மஸ்கான் கவர்ச்சி புகைப்படங்கள்

Close