சர்ச்சையில் சிக்கிய ரஜினி! காவல்நிலையம் போன கார் நிறுவனம்!
ரஜினிக்கு ‘டத்தோ’ பட்டம் கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டு கவர்னரே முன் மொழிந்திருக்கிறார். திரும்பி வரும்போது டத்தோ பட்டம் கன்பார்ஃம். ஆனால் ‘அன்பிற்குரிய விருந்தாளி’ என்று உயரத்தில் வைத்துக் கொண்டாடும் அதே தேசத்தில், ரஜினியால் ஒரு சின்ன கசமுசா. அவருக்கே தெரியாமல் நடந்த அந்த பிரச்சனைக்கு அவர்தான் என்ன செய்வார் பாவம்?
படப்பிடிப்புக்கு கிளம்புகிற போதும் சரி, திரும்பி வருகிற போதும் சரி. அவர் தங்கியிருக்கும் ஓட்டல் வாசலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு நின்று தலைவா… என்று கூக்குரலிடும் காட்சியை கண்டு மலேசியாவே ஆச்சர்யம் கொள்கிறது. அவரும் கிடைக்கிற கேப்பில் சில ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கிறார். தன் உயிரை காப்பாற்றிய மண் என்பதால் இன்னும் சற்று அன்பு காட்டுகிறார் ரஜினி.
இவ்வளவு அன்புக்கு இடையிலும் இப்படியொரு பஞ்சாயத்து. என்னவாம்?
ரஜினிகாந்த் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அன்று அவரை அழைத்துச் செல்வதற்காக வந்த லிமௌசின் வகை ஆடம்பரக் காரை ஏற்பாடு செய்திருந்த நிறுவனம் தற்போது பிரிக்பீல்ட்ஸ் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை மலேசியா வந்த ரஜினியை, விமான நிலையத்தில் இருந்து அழைத்துக் கொண்டு போய், மாலை 4 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள தங்கும்விடுதியில் இறக்கிவிட வேண்டும் என்றதன் பெயரில் அந்த கார் சேவை நிறுவனத்திடம் பேசப்பட்டுள்ளது.
ஆனால் ரஜினியோ மாலை 6 மணிக்கு தான் விமான நிலையம் வந்திறங்கியுள்ளார். இந்நிலையில், ரஜினியை அழைத்துச் செல்ல அங்கு வந்த ஏற்பாட்டாளர்கள், அந்த ஓட்டுநரை மலாக்கா வரை செல்லும் படி கட்டாயப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
மாலை 4 மணி முதல் 6 மணி வரையில் தான் அந்தக் கார் சேவை பேசப்பட்டுள்ளது என்றும், மாலை சிலாங்கூரில் உணவுவிடுதி ஒன்றின் திறப்பு விழாவிற்கு வரும் வேறு ஒரு முக்கியப் பிரமுகரை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று அந்த ஓட்டுநர் எவ்வளவோ சொல்லியும் அதை ஏற்றுக் கொள்ளாத ஏற்பாட்டாளர்கள் அவரது செல்பேசியைப் பறிமுதல் செய்து மலாக்கா வரை அவரைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார்களாம்.
பொதுவாக இதுபோன்ற நீளமான காரை முக்கிய விருந்தினர்கள் மலேசியா வரும்போது அவர்களை அழைத்துச் செல்ல பயன்படுத்துவார்கள். இது அந்த நாட்டின் கவுரவமாக கருதப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு லட்சக்கணக்கில் பணம் வாடகையாக வசூலிப்பது கார் நிறுவனத்தின் வாடிக்கை.
மலாக்காவை அடைந்த பின்னர் 8.20 மணியளவில் தான் ஒட்டுநருக்கு செல்பேசி திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
இதனால், இரண்டாவது முக்கியப் பிரமுகருக்கு கார் சேவை வழங்க இயலாமல் போன அந்த நிறுவனம் தற்போது ரஜினிக்கு வரவேற்பு கொடுத்தவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளது.
இதனால் ரஜினியின் புகழுக்கு களங்கம் இல்லை என்றாலும், அவர் தலையை உருட்டுகிறார்களே என்பதுதான் ஐயகோ!
FAKE NEWS. THIS IS ABSOLUTELY RUMOUR.
வெளியில் நிற்கும் கூட்டத்தை பார்த்து மலேசியா ஆச்சர்யப் படுகிறதா! நல்லா பாருங்க! ‘வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு ஒரு நடிகரப் பார்க்க ஏன் இப்படி தமிழ் ஆளுங்க நிக்கறாங்கன்னு’ ஏளனமா பார்க்கதான் அதிக வாய்ப்பிருக்கு!