கார்டன் தந்த சுதந்திரம்! வேகமெடுக்கும் போலீஸ்!

விஐபி வீட்டு பிள்ளைகளுக்கு நாலாபுறத்திலிருந்தும் சப்போர்ட் என்கிற சித்தாந்தம் சிம்பு அனிருத் விவகாரத்தில் செல்லுபடியாகாது போலிருக்கிறது. இந்த விஷயத்தில் பீப் பிரதர்ஸ்சை காப்பாற்றுவதற்காக கார்டனின் கதவை தட்டினார்களாம் இருவரது தரப்பிலிருந்தும்! ஆனால் அங்கு எதுவும் செல்லுபடியாகவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, இந்த பிரச்சனையில் உண்மையை கண்டறிந்து பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கும்படி கண்ணசைவு காட்டிவிட்டதாம் கார்டன்! இப்படியொரு ஆன்ட்டி கிளைமாக்சை இருவர் குடும்பமும் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் இப்போதைய நிலை.

இதற்கிடையில் சிம்புவின் பாஸ்போர்ட்டை முடக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது போலீஸ். ஆமாம்… இன்று சென்னை வருவதாக இருந்த அனிருத் என்னவானார்? கிளம்ப வேண்டாம். கனடாவிலேயே இருக்கவும் என்று இங்கிருந்து அறிவுறுத்தப்பட்டதாம். அதுமட்டுமல்ல, இன்னும் சில தினங்களில் கிளம்பி மும்பை போய்விடு என்றும், அங்கு அனிருத் செய்ய வேண்டிய இசைப்பணிக்காக ஒரு ரெக்கார்டிங் தியேட்டர் வாடகைக்கு பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் சில தினங்களில் கோவை போலீசிடம் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய நிலையிலிருக்கும் இருவரும், நேரில் செல்லாமல் தத்தமது வழக்கறிஞர்களைதான் அனுப்புவார்கள் போலிருக்கிறது. இதற்கிடையில் தன் மகன் சதி வலையில் சிக்கிவிட்டான் என்று கமிஷனரிடம் மனு கொடுக்கப் போன டிஆரிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினாராம் கமிஷனர். “முதலில் உங்க பையனை கொண்டு வந்து போலீஸ்ல ஒப்படைங்க” என்று அவர் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது. இன்னொருபுறம், அனிருத்தின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்கள். அடிக்கடி போலீஸ் வந்து விசாரித்துக் கொண்டிருப்பதால்தான் இந்த ஓட்டம்.

புள்ளைங்க தறுதலைன்னா பெற்றவங்களுக்கும்தான் பிரச்சனை! ஐயோ பாவம்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிம்புவால் கவிழ்ந்த சொம்பு? விஜய் மில்டன் படத்திலிருந்து டிஆர் கல்தா!

“தன்மான சிங்கம் டிராஜேந்தரை, இப்படி அவமான சின்னம் ஆக்கிவிட்டாரே அவரது மகன்?” என்று அச்சச்சோவாகிறது கோடம்பாக்கம். பெற்ற கடமைக்காக அவரும் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறார். இந்த...

Close