அஜீத்தின் தலைக்கு மேல் அரசியல் மேகம்! ரைட்டா? ராங்கா? புரியலையே?

ஆறே சதவீதம் ஓட்டு வங்கி வைத்திருக்கிற விஜயகாந்த்தை, ‘விஷய’காந்தாக கருதி ஒட்டுமொத்த தமிழ் நாட்டு அரசியலும் அவரது வீட்டை சுற்றி சுற்றியே இருக்கிறது. அவரோ வந்தவங்களுக்கு நாலு பிரட்டும் ஒரு வாட்டர் பாட்டிலும் கொடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறார். தேறியது அவ்ளோதானா, அதற்கும் மேலா? என்பதை தேர்தல் நிவாரணம்(?) கேட்டுப் போன அந்த அரசியல் கட்சிகள்தான் சொல்ல வேண்டும். அதற்குள் கடந்த நான்கு நாட்களாக வேறொரு செய்தி வந்து உலுக்கிக் கொண்டிருக்கிறது தமிழகத்தை.

அஜீத்தை பா.ஜ.க வில் சேர்க்க அக்கட்சி மேலிடம் காய் நகர்த்தி வருகிறதாம். அந்தக் காய் சுண்டைக்காயா? பரங்கிக்காயா? என்பதை பிறகு பார்க்கலாம். அஜீத்தை ஏன் இப்படி வளைத்து வளைத்து இழுக்கிறார்கள்? வேறொன்றுமில்லை. அவரது ஜென்ம ஜாதகம் அப்படியாக அமைந்திருக்கிறதாம். அவரே விரும்பாவிட்டாலும் அவர் அரசியல் கட்சிக்குள் வந்தாக வேண்டும் என்று கூறுகிறார்கள் வாய் பலம் மிகுந்த ஜோதிடர்கள். இது டெல்லி வரை கேட்டிருக்கக் கூடும். அதனால்தான் இந்த இழுப்பு முயற்சி.

பொதுவாகவே தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருப்பவர் அவர். அதிக கூட்டத்தை கண்டால் அலர்ஜியாவதுதான் அவரது ஸ்பெஷாலிடி. அப்படிப்பட்டவரை எந்நேரமும் கோஷம், வாய்க்கூச்சல் ஏரியாவுக்குள் வரவழைப்பதென்றால் நடக்கிற காரியமா? சைலண்ட்டாக மூவ்கள் நடந்தாலும், நமது காதுக்கு பல்லி கத்தும் சப்தம் கூட கேட்கவில்லை. அஜீத்தின் நிழல் போலிருக்கும் சிலரை தொடர்பு கொண்டு நாம் விசாரிக்கும் போது, கடும் உஷாராகவே பதிலளிக்கிறார்கள் அவர்கள்.

“தல அமைதியா ரெஸ்ட் எடுத்துகிட்டு இருக்கார். எந்த கட்சிக் கொடி கட்ன காரும் வீட்டு வாசலுக்கு வந்ததா தெரியல. இன்னொன்று… அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. தேர்தலில் ஓட்டு போடுகிற போது மட்டும் அவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவானவர். மற்ற நேரத்தில் அவர் யாரோ? இந்த நாட்டில் இயங்கி வரும் கட்சி எதுவோ? எதுவும் அவருக்கு தெரியாது. சம்பந்தமும் இல்லை” என்கிறார்கள் ஒரேயடியாக! இருந்தாலும் அவரை பற்றி வரும் இந்த தகவலை அவரே மறுக்காதவரை இனு இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் போலதான் தெரிகிறது.

வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுகிறவர்களுக்கெல்லாம், இந்தா இன்னும் கொஞ்சம் புளிப்பு முட்டாய் என்று கொடுப்பதற்கு மட்டும் இப்பவே தயாராக இருக்கிறது மீடியாவின் கற்பனை!

ஒரு நல்ல மனுஷனை சிவனேன்னு இருக்க விடுங்களேன்ப்பா…

3 Comments
 1. Ranjith says

  Intha Fraud nalla monjiya… ajak. ne arasiyal vanthu paru.. deposit kuda kidaikathu

  1. இராமமூர்த்தி நாகூரான் says

   அவரு டெபாசிட் வாங்க மாட்டாருன்னு நீ யாருகிட்டே ஜோசியம் பாத்தே? இல்ல நீயே ஒரு ஜோசியகாரனா? அட அப்படியே இருந்தாலும் நீங்க ஏன் இப்படி கொந்தளிக்கிறீங்க? பாஸ் இதெல்லாம் சும்மா ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல். படிச்சமா அடுத்த வேலைய பாத்தமான்னு போங்க பாஸ்.

  2. billa balu says

   Daii Ranjith Avaru varatum athukapparam pakalam deposits kidaikutha illaiyanu athuvarailum me pothikitu iruda by thala veriyan

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அதிமுக வில் பிரபு! சிக்குமா சிவாஜி பேமிலி?

“யடேய்... கட்சி நடத்தணும்னா காசு செலவழிக்கணுமாம்ல? போங்கடாங்...” நடிகர் திலகத்தின் மைண்ட் வாய்ஸ் இப்படியாக இருந்தாலும், அவரும் கொஞ்ச நாள் தனிக்கட்சி கண்டார் என்பது கல்வெட்டில் பொறிக்க...

Close