அந்த பையன் யாருன்னா…? பூஜா விளக்கம்
காலையில் நாம் எழுதிய ஒரு செய்தியும், வெளியிட்ட ஒரு போட்டோவும் தமிழ்சினிமாவுலகத்தை லேசாக ஷேக் பண்ண, சம்பந்தப்பட்ட பூஜாவை எப்படியோ தேடிப்பிடித்துவிட்டார்கள். \என்னங்க இது? நீங்களும் ஒரு பையனும்…?| என்று துவங்கும் போதே ‘அதெல்லாம் சும்மாங்க’ என்று பேச ஆரம்பித்திருக்கிறார் பூஜா. அதற்கப்புறம் அவர் கொடுத்த விளக்கங்களும் விவாதங்களும் பின் வருமாறு-
‘கடவுள் பாதி மிருகம் பாதி’ படத்தில் வரும் ஒரு காட்சிக்கான ஸ்டில்தான் அது. அதை எப்படியோ தேடிப்பிடித்து எனக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க என்று சிரித்தவர், அந்த படத்திலிருக்கும் நபரை பற்றியும் பேசியிருக்கிறார். ‘அவன் என்னோட பெஸ்ட் பிரண்ட். இன்னும் சொல்லப் போனா என்னோட ஒண்ணா படிச்சவன். பேர் ராஜு. இந்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்கிறேன். எனக்கு ஜோடியா நடிக்கணும்னு கேட்டான். நான் உடனே சரின்னுட்டேன்’.
‘மற்றபடி எனக்கும் அவனுக்கும் லவ்வுன்னு சொன்னீங்கன்னா, அவனே தலை தெறிச்சு ஓடிடுவான். ஆக மொத்தம் பிரஸ்செல்லாம் சேர்ந்து எனக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணி வைக்காம ஓய மாட்டீங்க போலிருக்கு. என்ஜாய்… ’ என்று பூஜா சிரிக்க, ஒரு ஸ்டெப் கூட முன்னேற முடியாதளவுக்கு அந்த போட்டோ தொபுக்கடீர்…!
எந்த நேரத்துல யாரு எடுத்த போட்டோவோ? ஆறு மணி நேரம் கூட தாக்குப்பிடிக்காத கிசுகிசுக்கு மெனக்கட்டு ஒரு போட்டோ? ஹ்ம்ம்…
I guess it a marketing strategy for the movie ‘கடவுள் பாதி மிருகம் பாதி’. All of us know about the movie now. well done. 🙂