லவ் பண்ணுவதாக சொன்னவரை ‘போடா’ என்று திட்டிய பூஜா!
பூஜா என்றால் தமிழில் என்ன அர்த்தமோ, தெரியாது. ஆனால் இன்று அவர் பேசியதை கேட்டிருந்தால் பூஜா என்றால் ‘ஒளிவு மறைவு அற்றவர்’ என்று அர்த்தம் கொள்வீர்கள். அந்தளவுக்கு ஒரு ஓப்பன் ஸ்பீச்!
ராஜ் ஹீரோவாக நடித்து அவரே தயாரித்து அவரே இயக்கியும் இருக்கிற படம் ‘கடவுள் பாதி மிருகம் பாதி’. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் வளாகத்தில் நடந்தது. அந்த விழாவின் ஒரே அட்ராக்ஷன், அட்மாஸ்பியர், அழகு, எல்லாமே பூஜாதான். முதலில் பேச அழைக்கப்பட்டவரும் அவரேதான்.
‘நான் ஏன் இங்க வந்திருக்கேன்னா? ராஜ் என்னோட காலேஜ்மெட். அதுமட்டுமில்ல, பதினாறு வருஷத்துக்கு முன்னாடி என்னை உருகி உருகி காதலிச்சவன். வீட்ல என் அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். காலேஜ் போனோமா, படிச்சோமா, வந்தோமான்னு இருக்கணும் அவருக்கு. பெங்களூர்ல நான் படிச்ச காலேஜ்க்கு பக்கத்துலதான் அவன் காலேஜ். ஒரு மூணு மாசம் என்னை விடாம சுற்றி வந்தான். எங்கிட்ட அவன் லவ்வை புரப்போஸ் பண்ணினப்போ போடான்னு திட்டிட்டேன். (அப்படிதானேடா… என்கிறார் பக்கத்திலிருக்கும் ராஜ்ஜிடம்) அன்னையிலிருந்து இன்னைக்கு வரைக்கும் நாங்க நல்ல பிரண்ட்ஸா இருக்கோம். அவன் ஒரு நல்ல ஹியூமன் பீயிங். ரொம்ப ரொம்ப நல்லவன்.
இந்த படத்தை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி எங்கிட்ட வந்து ஒரு உதவி வேணும்னு கேட்டான். எங்கிட்ட பணமெல்லாம் இல்லை. பணம் மட்டும் கேட்றாதேன்னு சொன்னேன். இல்லயில்ல. ஒரு கேமியோ ரோலில் நடிக்கணும்னு சொன்னான். அதுக்கென்ன? நடிச்சுட்டா போச்சுன்னு நடிச்சு கொடுத்தேன் என்றவர், அப்படியே மேடையில் நின்று அவருக்கு ஒரு பிளையிங் கிஸ்சும் கொடுத்தார்.
அதற்கப்புறம் பேச வந்த ராஜ், படத்தை பற்றி சற்றே தடுமாறியபடி பேசிக் கொண்டிருந்தார். சடக்கென்று குறுக்கே புகுந்து மைக்கை பிடித்த பூஜா, முதல் படம். இப்படியா பேசுவே? நான் இப்படி ஒரு படம் பண்ணியிருக்கேன். என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க. படத்தை பற்றி நல்லா பிரமோட் பண்ணி கொடுங்கன்னு கேட்க வேணாமா? என்று அதையும் சொல்லிக் கொடுக்க, ஆடிப்போனார் ராஜ். பேச்சோடு பேச்சாக, பூஜா… ஸ்டில் ஐ லவ் யூ என்று அவர் சொல்ல, உதைப்பேன் என்பது போல சைகை செய்தார் பூஜா.
ஒருவேளை சொல்லிவச்சுட்டு நடிக்கிறாங்களா? ஒண்ணுமே புரியலயே பாஸ்…!
பின்குறிப்பு- இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க ஆர்யாவிடம்தான் கேட்டாராம் ராஜ். அவரும் இதோ அதோ என்று கால்ஷீட் தருவதாக இழுத்தடிக்க, பேசாமல் நாமே நடிச்சுருவோம் என்று களத்தில் இறங்கிவிட்டார். சும்மா சொல்லக்கூடாது. ஆர்யாவை விட அமர்க்களமாகவே இருக்கிறார் ராஜ். ஆக்ஷனிலும் சூடு பறக்க வைத்திருக்கிறார்.