பூஜாவுக்கு கல்யாணம்?
பெங்களூரிலிருந்து நமக்கு இந்த புகைப்படத்தை அனுப்பி வைத்த யாரோ ஒரு புண்ணியவான் ‘என்னன்னு விசாரிங்க?’ என்று ‘நோட்’ போட்டிருக்கிறார். படத்திலிருப்பது நடிகை பூஜா, அருகிலிருப்பவர்தான் யாரென்று தெரியவில்லை. தமிழ்சினிமா கிசுகிசு கிங்கரர்களின் பிடியிலிருந்த பூஜா, எப்போது ஃபீல்டை விட்டு ஒதுங்கினாரோ, அப்போதிலிருந்தே அவர் பற்றிய கிசுகிசுக்களும் குறைந்துவிட்டது. யாருமே எதிர்பாராத விதத்தில் மீண்டும் திரும்பினார் அவர்.
‘பிரஸ்காரங்கள்லாம் சேர்ந்து எனக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. ஏன் சில பத்திரிகையில் எனக்கு குழந்தை பிறந்துட்டதா கூட எழுதுனாங்க. நான் அப்படியேதான் இருக்கேன். நல்ல கதையா இருந்தா நடிப்பேன். இல்லேன்னா வீட்டிலேயே சும்மா கூட இருப்பேன். நான் மற்றவங்களுக்காக வாழுறவ இல்ல’ என்று பெரிய விளக்கம் கொடுத்து, கிசுகிசு எழுத்தாளர்களின் பூதக்கண்ணாடியையும் பிடுங்கி வைத்துவிட்டு போனார்.
ஆர்யாவைதான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்கிற பூஜா பற்றிய எண்ணங்களை அதற்கப்புறம் வந்த அனுஷ்கா, ஹன்சிகா, நயன்தாராவெல்லாம் அழித்துவிட்டு போன மாதிரி, கிசுகிசு பற்றிய பூஜாவின் முந்தைய விளக்கங்களையெல்லாம் அழித்திருக்கிறது இந்த போட்டோ. நாமும் நமக்கு இந்த புகைப்படம் கிடைத்த இரண்டு தினங்களாக பூஜாவின் மொபைலுக்கு கால் பண்ணிக் கொண்டேயிருக்கிறோம். பட்? நாட் ரீச்சபுள் அட் த மூவ் மென்ட்டாகவே இருக்கிறார் அவர்.
பூஜாவே வந்து இந்த போட்டோவுக்கு விளக்கம் கொடுக்காத வரைக்கும், சந்தேகத்துக்கு சதை போட்டுக் கொண்டேதான் இருக்கும்!