அப்படியெல்லாம் படம் எடுக்கிறாரு அந்தாளு… சொல்லாமல் ஓடிவந்த பூனம் கவுர்?

பூனம் கவுர் என்பதை பூனர் அவுர்(ரு)… என்று புரிந்து கொண்டார் போலிருக்கிறது பிரபல இயக்குனரான ராம்கோபால்வர்மா. அவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் ‘ஸ்ரீதேவி’ என்கிற படம் வெளிவரும்போது நாடெங்கிலுமிருந்து அவருக்கு அனுப்பப்படும் ‘மொளகா’ பார்சல்கள் அவ்வளவு நல்லவையாக இருக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம். முதலில் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனவர் பூனர் கவுர்தான் என்கிற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

ஒரு டீச்சரை 12 வயது மாணவன் தப்பான பார்வையோடு பார்ப்பதுதான் படம். உளவியல் ரீதியான சிக்கலை அவிழ்க்கப் போகிறேன் என்று கூறிவிட்டு, எதை எதையோ அவிழ்க்க கிளம்பியிருக்கிறார் ராம்கோபால் வர்மா. இந்த படத்தின் விளம்பர ஸ்டில்களை பார்த்து நாடே கொந்தளித்துப் போய்விட்டது. அது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் அழைக்கப்பட்ட பூனம் கவுரிடம், ‘இந்த படத்தில் உங்களுக்கு பதினாறு பதினேழு வயசில் ஒரு பையன் ஜோடி’ என்று சொல்லியிருந்தாராம் ராம் கோபால். தன்னை விட ரெண்டு மூணு வயசுதானே சின்னவர். இருக்கட்டும்… என்று போன பூனத்திற்கு செமத்தியான அதிர்ச்சி. ஒரு பனிரெண்டு வயசு சிறுவன்தான் தனக்கு ஜோடி என்று புரிந்தது அவருக்கு. போட்டோ செஷனும் எடுக்கப்பட்டது. அதற்கப்புறம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்துவிட்டாராம் பூனம்.

ஏன்? படம் வெளிவந்தால் பையனை விட்டுவிடுவார்கள். நாம்தான் சிக்குவோம் என்கிற முன்னெச்சரிக்கைதான். படத்திற்கு எழுந்த எதிர்ப்புகள், பூனர் கவுர் ஓடிப்போனது. முதலில் வைக்கப்பட்ட ‘சாவித்ரி’ என்ற தலைப்புக்கு எழுந்த எதிர்ப்பு எல்லாவற்றையும் கவனித்த ராம்கோபால் கர்மா, சட்டென்று தலைப்பையும் மாற்றி, டீச்சர் மாணவன் என்கிற உறவையும் மாற்றி அமைத்தார். ஓடிப்போன பூனத்திற்கு பதிலாக பிரபல மாடல் அனுஷ் கிருதியை நடிக்க வைத்திருக்கிறார்.

முதலில் எடுக்கப்பட்ட பூனம் படமும், இப்போது எடுக்கப்பட்ட அனுஷ் கிருதி படமும் மாறி மாறி நெட்டில் வெளியாக… இவ்விரண்டு தொப்புளையும் மாறி மாறி பார்த்து ஆறு வித்தியாசங்களை அலசிக் கொண்டிருக்கிறார்களாம் ரசிகர்கள்.

அட கண்றாவி புடிச்சவங்களா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இனி தியேட்டர்களில் ஷார்ட் பிலிம் பார்க்கலாம்… கார்த்திக் சுப்புராஜின் அடுத்த ஸ்டெப்!

‘குறும்படம் எடுக்கிற குரங்குகளா’ என்று இனிமேல் யாராவது திட்டினால், ‘அட போய்யா... ’ என்று அலட்சியம் காட்டுகிற காலம் இது. அந்த அலட்சியத்தில் மேலும் கொஞ்சம் கெட்டி...

Close