கமல் வீட்டுக்கு கரண்ட்! மனசு வைத்த மின்வாரியம்

பல நாட்களாக கரண்ட் இல்லை. கொசுக்கடி, துர்நாற்றம் இவற்றோடு குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறது பாதிக்கப்பட்ட சென்னைப் பகுதிகள் பல. இதில் கமல் வீட்டில் கரண்ட் இல்லையென்றால் யாருக்கு துக்கம் வரப்போகிறது? ஆனால் இந்த நேரத்திலும் அந்த ‘கட்’டுக்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து அவஸ்தைப்பட்ட பலர், ‘குய்யோ முய்யோ’ என்று குமுறி வைக்க, இது கமலை பழிவாங்கும் அரசியல் என்ற கோணத்தில் வண்டி நகர ஆரம்பித்தது.

ஏம்ப்பா… எங்க பிரச்சனையே சொல்லி மாளல… இதுல இது வேறயா என்று ரத்தத்தின் ரத்தங்கள் பலர் அலுத்துக் கொண்டார்கள். எப்படியோ? நேற்றே கமல் வீட்டில் பல்ப்பை எரிய விட்டது மின் வாரியம். பங்களாவுக்குள் சவுரியமாக இருந்து வேடிக்கை பார்ப்பதற்காக வெட்கப்பட்ட கமல், கரண்ட் கட் ஆனதும் எங்கு கிளம்பிப் போனாரோ தெரியவில்லை. இன்னும் அலுவலகம் திரும்பவில்லை என்கிறது அவர் ஏரியா.

இதற்கிடையில் கமல் சார்பாக நடிகர் சங்க பொருளாளர் கார்த்தியிடம், பதினைந்து லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளதாம். வவுத்தெறிச்சலோட கொடுத்த பணத்தை வாங்குவதற்கு விரும்புவானா தமிழன்?

அடுத்த கொசுவர்த்தியை கொளுத்துங்கடா…!

4 Comments
 1. Rajagopalan says

  உண்மையா ???? உண்மை என்றால் இன்னும் அதிகமாக கொடுத்து இருக்கலாம் என்பதே எனது கருத்து. என்றேன்றால் இந்த ஆண்டு மட்டும் கமல் நடிப்பில் 3 படங்கள் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது. ஒரு படத்திற்கு குறைந்தது ரு. 20 கோடி என்றால் 3 படங்களுக்கு ரு. 60 கோடி சம்பளமாக பெற்று இருப்பார். ரு. 60 கோடி சம்பளம் பெற்று ரு. 15 லட்சம் நிவாரண நிதியாக கொடுத்தார் என்பது (அது உண்மையா அல்லது வழக்கம் போல வதந்தியா என்பது வேறு விஷயம்) நடுநிலையாலர்களுக்கே வெளிட்சம். ரஜினியாவது உள்ளூர் சூப்பர் ஸ்டார். ஆனால் கமலோ, உலகம் அறிந்த உலக நாயகன் இன்னும் அதிகமாக நிவாரண தொகை அளிப்பார் எதிர்பார்க்கிறேன் .

  1. Raj says

   Arivazhi rasagopal oora vittu oduren sonnathal ulaganayaganah ulagamey alwar theru nayaganah pathu ulagamamey sirichuthu

 2. கண்ணன் says

  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களுக்கு உதவ ரூ 10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் ரசிகர் மன்றங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர். தமிழக வெள்ள நிவாரணத்துக்கு கடந்த டிசம்பர் முதல் தேதி ரூ 10 லட்சம் வழங்கிய ரஜினிகாந்த், அதன் பிறகு பெய்த பெருமழை, சென்னை – கடலூரைத் தாக்கிய வரலாறு காணாத வெள்ளத்துக்குப் பிறகு தனது ரசிகர் மன்றங்கள் மூலம் மக்களுக்கு நேரடியாக நிவாரணப் பொருள்களை அனுப்ப உத்தரவிட்டார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் அலுவலகத்தில் ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோர் நேரில் இருந்து இந்த உதவிப் பொருள்களை கடந்த 5 நாட்களாக விநியோகித்து வருகின்றனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்த அலுவலகம் கிட்டத்தட்ட ஒரு நிவாரண உதவி மையமாக மாறியுள்ளது. உதவி கேட்டு ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்துக்கு வரும் அனைத்து மன்ற நிர்வாகிகளும் வுண்டர்பார் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு, அவர்கள் கொண்டு வரும் வாகனங்களில் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.சென்னையில் நிவாரணப் பொருள்கள் கிடைப்பது கஷ்டமாக இருப்பதால், ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகளில் சென்னைக்கு கொண்டுவரப்படுகின்றன. போர்வைகள், புதிய ஆடைகள், குழந்தைகளுக்கான உடைகள், நாப்கின்கள், குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட், பிரட், பால் போன்ற உணவுகள், ப்ளீச்சிங் பவுடர், கொசுவர்த்தி, அத்யாவசிய மருந்து மாத்திரைகள், வெள்ளத்தால் அனைத்தையும் முற்றாக இழந்தவர்களுக்கு சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை ரசிகர்கள் மூலமே விநியோகிக்க ரஜினி அறிவுறுத்தியுள்ளதாக ராகவேந்திரா மண்டப நிர்வாகிகள் தெரிவித்தனர்.நிவாரணப் பொருள்கள் வழங்குவதில் தனுஷ் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களுடன் கைகோர்த்துள்ளனர்.
  ஆர்பிஎஸ்ஐ என்ற பேஸ்புக் ரசிகர்கள் குழு மூலமும் உதவிப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

 3. பாரத் says

  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த ரு. 15 லட்சம் நீதி போதுமானதா என்பதை உங்கள் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன் (அப்படி ஒன்று உங்களுக்கு இருந்தால்). மேலும், பிறவிக்கலைஞன் , 6 வயது முதல் நடிக்கிறார். கலை உலக மேதை. நடித்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றிபெற்ற படங்கள். அது தவிர, “ஆருயிர் மனைவி” மற்றும் இரண்டு மகள்கள் கலைச்சேவை” செய்து வருகிறார்கள். ஆகையால், பணத்திற்கு பஞ்சம் இல்லை. அப்படியும் செய்ய மனம் வரவில்லை என்றால், கமலுக்கு ஏதாவது ஒன்னு என்றால் “அனைத்தையும் கொடுக்கும்” விசுவாசிகள் இருக்கும் போது , “ரசிகர்கள் செய்யவும்” என்ற ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தால் !!!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினி கமல் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! கோவையில் ஸ்டார்ட் ஆனது முதல் குமுறல்!

இந்த மழை இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ? நேற்று வரை உச்சாணிக் கொம்பில் இருந்த பளபள ஹீரோக்களின் சட்டையை பற்றி இழுத்து தெருவில் இழுத்து விடும் போலிருக்கிறது...

Close