சிங்காரவேலன்- பவர் சீனி சந்திப்பு ரஜினிக்கு குழிபறிக்கும் வேலை ஸ்டார்ட்? அஹ்ஹஹஹஹஹ்ஹா!!!!

லிங்கா புகழ் சிங்காரவேலன் ஒரு படத்தை தயாரிப்பதாகவும், அந்த படம் பாட்ஷா படத்தை அப்படியே ஸ்பூஃப் செய்யும் விதத்திலும் இருக்கும் என்ற செய்தியை ஏற்கனவே காற்று வாக்கில் கேட்டிருப்பீர்கள். இப்போது கண்ணார காண்கிற அளவுக்கு நிலைமையில் முன்னேற்றம். இந்த படத்தில் ரஜினியை இமிடெட் செய்யும் கேரக்டரில் நடிக்க பவர்ஸ்டார் சீனியை தேர்வு செய்திருந்தாராம் சிங்காரவேலன். ஆனால் இந்த செய்தியை இன்று காலை வரை மறுத்து வந்த பவர்சீனி, இன்று பிற்பகல், ‘ஆமாம். நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான். இன்னைக்கு என்னை சந்தித்த சிங்காரவேலன் மேற்படி படத்தில் நடிக்க அட்வான்ஸ் கொடுத்துட்டார்’ என்று மீடியாவில் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்.

மும்பை தாதாவான ரஜினி எப்படி ஒரு சாதாரண ஆட்டோக்காரராக வருவார். அவர் எவ்வளவு பெரிய தாதா என்பது தெரிய வரும்போது ரசிகர்களின் ஆரவாரம் எப்படியிருந்தது என்பதையெல்லாம் சொல்லி நினைவுபடுத்த வேண்டிய நிலையில் இல்லை. அந்த படம் இப்போது சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்டாலும் வாயில் ஈ போவது தெரியாமல் லட்சோப லட்சம் ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த படத்தில் ரஜினி போட்ட அந்த பவர் புல்லான ஆட்டோக்காரர் வேஷத்தில்தான் வரப்போகிறாராம் இந்த புவர். ஸாரி… பவர்.

பவர் கட்டை கூட சகிச்சுக்கலாம். ஆனால் இந்த புவர் கட்டோட அட்டகாசத்தை சகிச்சுக்க முடியைலையே நாராயணா?

Read previous post:
ஹன்சிகா மேடைக்கு நயன்தாரா வருவாரா? ‘உயிரே உயிரே ’ ஸ்டார்ட் மியூசிக்

ஹன்சிகாவும் த்ரிஷாவும் செம ராசியாகிவிட்டார்கள். சமீபத்தில் அவர்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்றே அதற்கு சாட்சி. ஒரே அந்தஸ்திலிருக்கிற இரண்டு ஹீரோயின்கள் இப்படி பழகுவது அவ்வளவு ஈசியான...

Close