இந்தி படம்தான் அடுத்த டார்கெட்! கிலி கிளப்பும் சீனி
சிறையுலகத்தில் எப்படியோ? படவுலகத்தில் இப்பவும் கொண்டாடப்படுகிற நபராகவே இருக்கிறார் ‘பவர் ஸ்டார் ’ சீனிவாசன். அவரை எந்த மேடையில் பார்த்தாலும் கொண்டாடி கூத்தாடுகிறார்கள் ரசிகர்கள். அது தானா வந்த கூட்டமா என்பது கூட ஒரு கேள்விதான். போகட்டும்… இப்போது நாம் சொல்ல வருவது இதையெல்லாம் விட ஷாக்! ஒரு நாள் அவரது மனைவி கேட்டாராம். ‘ஏங்க… நீங்க இந்தியில் நடிக்க ட்ரை பண்ணலாமே?’ என்று. அதற்கப்புறம் தமிழ்நாட்டில் தனக்கிருக்கும் மாஸ் பற்றி தனி வீடியோ எடுத்து இந்தி படவுலகத்தில் பரவ விட்டிருக்கிறாராம் பவர்.
ஆசைப்படுவது அவரவர் உரிமை. அதில் வெற்றியும் பெறட்டும்.. தப்பில்லை. நடுவில் இவர் ஒரு கட்சியில் இணைந்து தன்னை பாதுகாத்துக் கொண்டாரல்லவா? அந்த கட்சியில் சார்பாக மாநகராட்சி மேயர் தேர்தலில் சீட் கூட கேட்டிருந்தார் பவர். எனக்கு பத்து கோடிய தனியா வெட்டிட்டு, பத்து கோடி எலக்ஷன் செலவு பண்ணுங்க என்று கட்சி தலைவர் சொன்னதாக அப்போது ஒரு தகவல் உலவியது.
பவர் உடனே பவர் கட்டாகி, அந்த எண்ணத்தையே கைவிட்டதாகவும் கூறப்பட்டது. இப்போதும் பழைய தலைவருக்கு நெருக்கமானவர்கள் பவரை பார்ப்பதாகவும், இவர் அவர்களை குளிர்வித்து அனுப்புவதாகவும் கேள்வி. பவர் ஸ்டார் இந்திக்கு போவதை தமிழின் மீது தீராக்காதல் கொண்ட தலைவர் ஏற்றுக் கொள்ளுவாராமா?