பிரபுவுக்கு எந்நேரமும் அதே நினைப்புதான்!

பிரபல ஜுவல்லரி நிறுவனம் ஒன்றுக்காக அல்லும் பகலும் உழைக்க ஆரம்பித்துவிட்டார் நடிகர் பிரபு. எந்நேரமும் அந்த ஜுவல்லரி பற்றிய சிந்தனையே ஓடுகிறதாம் அவருக்குள். கடையே 17 ந் தேதிதான் லாஞ்ச் ஆனது. ஆனால் அதற்கு முன்பே ஒரு நாள் தனது உறவினர்கள், மற்றும் நண்பர்களின் குடும்பங்கள் எல்லாவற்றையும் ஸ்பெஷலாக கடைக்கு ‘இன்வைட்டி’ விட்டார் அவர். வந்தவர்களுக்காக வியாபாரத்தையும் முன் கூட்டியே ஆரம்பித்துவிட்டதாம் நிறுவனம். இதற்கிடையில் பிரபுவை ஹீரோவாக நடிக்க வைக்க அவர் பின்னாலேயே அலைந்து கொண்டிருக்கிறார் ஒரு இயக்குனர்.

இத்தனை வருஷம் கழித்து மீண்டும் அவரை ஹீரோவாக நடிக்க வைக்கதான் அவருக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்? இதெல்லாம் நமக்கு சரிப்படாது என்று ஒதுங்கிவிடாமல், வாங்க ஜமாய்ச்சுடலாம் என்றாராம் பிரபு. ஆனால் அவருக்கு கால்ஷீட் தருவதாக சொன்னவர் முழுக்க முழுக்க இந்த நகைக்கடை விஷயத்திலேயே பிஸியாகிக் கிடப்பதால் டைரக்டர் சைடில் ரொம்பவே அப்செட்.

தங்கம் கிடக்கட்டும்… தொழிலுக்கு திரும்பி வாங்க சார்….

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அவரோட சேர்ந்து இவரும் கெட்டுட்டாரே…?

புதுசாக ஒரு வம்பு! ஆரம்பத்திலேயே இதை தடுத்துவிட்டால் சிக்கலில்லை. சின்ன பசங்கதானே... போகட்டும் என்றால் பிற்பாடு சிக்கல்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இந்த ‘வம்பு’ குறித்து வெளிப்படையாக பேச...

Close