‘ மொத்த வித்தையையும் இறக்குறேன் ’ பிரேம்ஜி பஞ்ச்! கோடம்பாக்கம் குபீர்!

‘ மொத்த வித்தையையும் இறக்குறேன் ’ என்கிற வார்த்தை பிரயோகம் அண்மை காலமாக ரொம்பவே பேமஸ்! தொலைக்காட்சி பேட்டியொன்றில், ‘இது வரை நான் கத்துகிட்ட மொத்த வித்தையையும் அஞ்சான்ல இறக்கியிருக்கேன்’ என்றார் டைரக்டர் லிங்குசாமி. அந்த வீடியோ கிளிப்பிங்ஸ்சை எப்படியோ தேடிப்பிடித்து கொண்டு வந்து மஞ்ச தண்ணி ஊற்றி குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்கள் சமூக வலை தளங்களில். ‘ஒங்க மொத்த வித்தையும் இதுதானுங்களா?’ என்ற நக்கல் வேறு.

இந்த நிலையில்தான் ‘மாஸ்’ படத்தில் நடித்து வரும் பிரேம்ஜி, ‘சரோஜா சாமான் நிக்காலோ’ மாதிரி ஒரு பஞ்ச் கிடைக்க மாட்டேங்குதே என்று தேடிக் கொண்டிருந்தாராம். ஷாட் போய் கொண்டிருந்தது. ஒரு டேக்… ரெண்டு டேக்… என்று வாங்கிக் கொண்டிருந்த பிரேம்ஜி, திடீரென ‘இப்ப பார்றா. நான் கத்துகிட்ட மொத்த வித்தையையும் எறக்குறேன்’ என்று கூற, கலீர் என்று சிரித்துவிட்டார்களாம் அத்தனை பேரும். அப்புறம் விடுவாரா? ‘இதாண்டா என்னோட பஞ்ச் டயலாக். இனிமே இந்த படத்துல இதையே சொல்லி சொல்லி கும்மியடிச்சுர வேண்டியதுதான்’ என்றாராம்.

அஞ்சான் படத்தின் ஹீரோ சூர்யாதான் இந்த படத்திற்கும் ஹீரோ. சமூக வலைதள வம்பர்களிடம், ‘லிங்குசாமியை இப்படியெல்லாம் வாராதீங்கப்பா’ என்று வக்காலத்துக்கு வந்தவர் வெங்கட்பிரபு. இது அவரே இயக்குகிற படம். பிரேம்ஜி அவரது ஆருயிர் தம்பி வேறு. இந்த பஞ்ச் டயலாக் வேற தனியா ஒரு பிரச்சனையை உருவாக்கிடுச்சுன்னா? இதுதான் வெங்கட்பிரபுவின் கவலையாம். ‘தம்பி… வேணாம். வுட்ரு…’ என்றெல்லாம் அவர் சொன்னாலும் பிரேம்ஜி கேட்கணும்ல?

அவங்க கிடக்கட்டும்…. கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறங்குங்க பிரேம்ஜி…!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நான் சென்னை பொண்ணு… தீபிகா படுகோன் பேச்சால் சென்னை குளுகுளு…

பாஞ்சாலிக்கு புடவை தந்த கிருஷ்ணரை விட தீபிகாவுக்கு புடவை தந்த பாலம் சில்க்ஸ் ஸ்பெஷல்தான் போலிருக்கிறது. இல்லையென்றால் சென்னை சில்க்ஸ் படத்தில் நடித்த போது தனக்கு காஸ்ட்யூம்...

Close