பப்ளிக்கில் முத்தம்? இமானை அதிர வைத்த ப்ரியா ஆனந்த்

பாடல் வெளியீட்டு விழாக்களில், ‘நிஜமாவே இன்னைக்கு ஹீரோ இவர்தான்’ என்று இசையமைப்பாளரை பாராட்டி பேசுவது வழக்கம். ஏதோ காக்காய்க்கு சோறு வைக்கிற மாதிரியான இந்த சம்பிரதாய சாம்பிராணி புகையில் மயங்கி…, அல்லது இருமி… அன்றோடு தன் பெருமையை முடித்துக் கொள்வார்கள் சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்கள். அப்படியொரு விழாவாகதான் இருக்கப் போகிறது என்று எல்லாரையும் எதிர்பார்க்க வைத்த ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஹீரோக்களே பொறமைப்படுகிற அளவுக்கு பல்கி ஹீரோவானார் டி.இமான், மேடையிலிருந்த பலரும் இதனால் அதிர்ச்சிக்குள்ளானது வேறு விஷயம்.

வேறொன்றுமில்லை, விழாவுக்கு வந்திருந்த நடிகை ப்ரியா ஆனந்த் இசையமைப்பாளர் டி.இமானின் கன்னத்தை பிடித்து கிள்ளி கொஞ்சியதுதான் அந்த அதிர்ச்சிக்கு காரணம். படம் பற்றி பேச வந்த ப்ரியா, ‘எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. அது இசையமைப்பாளர் இமான் சாரோட கன்னத்தை பிடிச்சு கிள்ளணும்னு. இன்னைக்கு அதை நான் செய்யப் போறேன்’ என்று கூறியபடியே அவர் அமர்ந்திருந்த இடத்திற்கே போய் இரண்டு கன்னங்களையும் பிடித்து கொஞ்சிவிட்டு வந்தார். இரண்டு குஷ்பு இட்லிகளுக்கு ஸ்கின் டோர்ன் கொடுத்து ஒட்டி வைத்ததை போலவே இருக்கும் இமானின் கன்னம் வெட்கத்தால் மேலும் கருப்பானதை காண கண்கள் கோடி வேண்டும்.

‘கிசுகிசுவெல்லாம் எங்களை மாதிரி ஹீரோக்களை பற்றிதான் எழுதுறாங்க. ஆனால் கிடைக்க வேண்டியதெல்லாம் இமான் மாதிரி இசையமைப்பாளருக்குதான் கிடைக்குது’ என்று செல்லமாக கோபித்துக் கொண்டார் சிவகார்த்திகேயன். ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ பாடல்களை பாராட்டுவதை விட்டு விட்டு, சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் தங்கள் படங்களில் அவர் போட்ட பாடல்களை சிலாகித்துவிட்டு போனதுதான் ஹையோடா சங்கதி!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “மானே தேனே பேயே”

கல்சன் மூவீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பட நிறுவனம் தற்போது G.V. பிரகாஷ்  -  ஸ்ரீதிவ்யா சாரிக் நடிக்க மணிநாகராஜ் இயக்கத்தில் “ பென்சில் என்ற படத்தை மிக பிரமாண்டமான...

Close