கெண்டை முள்ளு தொண்டையில மாட்டுன மாதிரி திருதிருன்னு முழிக்குது கோடம்பாக்ஸ்
இதுவும் சம்பள மேட்டர்தான். தமக்கு வேண்டப்பட்ட நடிகைன்னா இயக்குனர்களே கொடியை உச்சத்தில் பறக்க விடுவார்கள். அப்படியொரு அசம்பாவிதம்தான் இது. தமிழ்சினிமாவில் தத்தி தத்தி முன்னேறி வருகிறார் ப்ரியா ஆனந்த். அவர் நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை என்றாலும், ஆபத்து கட்டத்திற்கு போகாமலிருப்பதால், ஒன்றிரண்டு இயக்குனர்கள் ப்ரியா ஆனந்த் பக்கம் திரும்புகிறார்கள்.
அதனால் தனது சம்பளத்தை பதினைந்துக்கு மேல் தாண்டாமிலிருந்தார் ப்ரியா. இது லட்சங்களில். ஆனால் சமீபத்தில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்திற்காக இவரை புக் பண்ணிய இயக்குனர் கே.கண்ணன், ஒரேயடியாக சம்பளத்தை நாற்பது லட்சத்திற்கு ஏற்றி விட்டாராம். இது எந்த அன்பின் அடிப்படையில் செய்யப்பட்ட விஷயமோ தெரியாது. ஆனால் அதற்கப்புறம் வருகிற தயாரிப்பாளர்களிடம் ப்ரியா ஆனந்த் கேட்பது, ‘நான் அந்த படத்திற்கே நாற்பது வாங்குனேன். நீங்க ஐம்பதுன்னா ஓ.கே’ என்கிறாராம்.
இதையடுத்து கெண்டை முள்ளு தொண்டையில மாட்டுன மாதிரி திருதிருன்னு முழிக்குது கோடம்பாக்ஸ்…