நல்லவேளை… எடப்பாடி முதல்வரானார்! இல்லன்னா விஷால் அதுக்கும் போட்டி போட்ருப்பார்!
எங்கு மேடை கிடைத்தாலும், அதை விஷாலுக்கு எதிராக போடப்பட்ட மேடையாகவே நினைத்து முழங்கி வரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு நேற்றும் ஒரு மேடை கிடைத்தது. விடுவாரா மனுஷன்? விளாசித் தள்ளிவிட்டார். சிரிக்க விடலாமா என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் இவர் பேசியதை கண்டு இன்னொரு சிறப்பு விருந்தினரான கே.பாக்யராஜே கொஞ்சம் அரண்டுதான் போனார். “உங்களுக்கு எந்த ஹீரோவும் கால்ஷீட் கொடுக்க மாட்டாங்க. புதுமுகத்தை வச்சுதான் படம் எடுக்கணும்” என்று தன் கருத்தையும் பதிவு செய்துவிட்டு போனார்.
அட… அப்படி என்னதான் பேசினார் சுரேஷ் காமாட்சி?
‘ ஹீரோவுக்கு பில்ட் அப் சீன் யோசிச்சே பல படைப்பாளிகள் காணாமல் போய்விட்டார்கள்… ஆனால், ஹீரோக்கள் 30 லிருந்து 100 கோடிகள் சம்பளம் வாங்க ஆரம்பித்துவிடுகிறார்கள்…. அவர்களது ரசிகர்கள் அவர்களுக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தியேட்டரில் டிக்கெட் எடுக்கும் போது ஆயிரம் ஆயிரத்து ஐநூறு என்று டிக்கெட் விலை வைக்கிறார்கள்… எப்படி அவனால் படம் பார்க்க முடியும்? ஆக, பெரிய நடிகர்கள் அவர்களது ரசிகர்களுக்கே விசுவாசமாக இருக்கமாட்டேங்கிறார்கள். நல்லா சம்பாதிச்சுட்டு ரிடையர்ட் ஆகும் போது முதலமைச்சர் கனவு வேற… எந்த பெரிய நடிகராவது அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தான் டிக்கெட் விற்கவேண்டும், என் சம்பளத்தைக் குறைத்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்களா? தங்களது ரசிகர்களுக்கே விசுவாசமாய் இருக்க முடியாதவர்கள் எப்படி முதல்வராகி ஒட்டுமொத்த மக்களுக்கும் விசுவாசமாய் இருப்பார்கள்…?
தியேட்டர் டிக்கெட் விலை அதிகம் என்பதால் தான் தமிழ் ராக்கர்ஸில் படத்தை விடுகிறான்… தமிழ் ராக்கர்ஸை பொதுமக்களும் கொண்டாடுகிறார்கள்.. ரசிகனுக்கும் திரையிடுவதற்குமான இடைவெளியை நாம் களையவேண்டும்… அதை விடுத்து, யார் மீதும் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதில் என்ன பயன்? அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களையே காப்பாற்ற முடியாத விஷால் எப்படி தயாரிப்பாளர் சங்கத்தைக் காப்பாற்றப்போகிறார்? நல்லவேளை, இன்றைக்கு ஒருத்தர் முதல்வராகிவிட்டார், இல்லாவிட்டால் விஷால், கவர்னர்ட்ட போயி நான் முதல்வராகி தமிழ்நாட்டைக் காப்பாற்றுகிறேன் என்று சொன்னாலும் சொல்வார்…
ரசிகர்கள் தயவுசெய்து பெரிய நடிகர்களை நம்பாதீர்கள்… புதுமுகங்கள் நடித்த நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுங்கள்… என் எஸ் கேவிலிருந்து இன்று வரை நகைச்சுவை நடிகர்கள் தான் உங்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும்வைக்கிறார்கள்… அந்த வகையில் உங்களைச் சிரிக்க வைக்கும் படமாக சிரிக்க விடலாமா வை எடுத்திருக்கிறார்கள்..வெற்றிபெற வாழ்த்துகள்..” என்றார்.
நிகழ்ச்சியில் இயக்குனர் கே.பாக்யராஜ், பவர் ஸ்டார் சீனிவாசன், இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். அவர்களை படத்தின் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் இயக்குனர் வி.பி.காவியன் இருவரும் வரவேற்றார்கள்.
https://www.youtube.com/watch?v=d0ilLIBlAvc
Suresh kaatchi yarrin edupudi endru ellorukkum theriyum. Ivan Enna seiyiraan endrum theriyum.
Tamil Tamil endru nari porvai vera.
நல்ல மனம் விஷால் வாழ்க