ஓட்ற பஸ்சை நிறுத்தி செக் பண்றதை விட்டுட்டு சம்பளத்தை குறைங்க! விஷால் மீது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடும் தாக்கு!

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள ‘பகிரி’ என்கிற படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட்டார். பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி பேசும்போது,

“நாங்கள் இந்தப் ‘பகிரி’ இயக்குநர் இசக்கி கார்வண்ணன் எல்லாருமே சீமான் என்ற ஒரே ஆலமரத்திலிருந்து வந்த விழுதுகள்.. இப்படத்தின் இசையமைப்பாளர் கருணாஸ் ஜல்லிக்கட்டு பற்றி சட்டசபையில் பேசியிருக்கிறார். மகிழ்ச்சி. அப்படியே அவர் திருட்டு விசிடி பற்றியும் பேச வேண்டும். இன்று தமிழ் சினிமா குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கிறது. சிறு படங்களுக்கு ஒரே நம்பிக்கை ஊடகங்கள்தான். ஆனால் படம் பார்த்து விமர்சனங்கள் பத்திரிகைகளில் வருவதற்குள் திரையரங்கில் படம் இருப்பதில்லை. தூக்கி விடுகிறார்கள். இன்று சினிமாவை யாரும் பார்க்காமலில்லை. திருட்டு விசிடியில் கூட காசு கொடுத்துதான் சினிமா பார்க்கிறார்கள். இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யக்கூட காசு கொடுத்துதான் பார்க்கிறார்கள். திரையரங்கில் போய்ப் பார்க்க ஒரு குடும்பத்துக்கு 2000 ரூபாய் செலவாகிறது.

ஏன் எல்லாரையும் திரையரங்கு போய் படம் பார்க்கக் கட்டாயப்படுத்த வேண்டும் ? கள்ளச் சாராயத்தை ஒழிக்க டாஸ்மாக் வந்தது போல் திருட்டு விசிடியை ஒழிக்க அதையும் சட்டப்பூர்வமாக்கிவிடுங்கள். அதனால் வரும் வருமானத்தை ஏன் இழக்க வேண்டும்? திரையரங்கிற்கு மக்கள் வரவில்லை என்கிறார்கள். சினிமா டிக்கெட்டை விட பார்க்கிங் கட்டணம் அதிகம். பார்க்கிங்கிற்கே 250 ரூபாய் செலவாகிறது. .பின் திரையரங்கிற்கு எப்படி வருவார்கள்?

ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக போகிறோம். அங்கு பார்க்கிங்குக்கு பணம் கொடுக்கிறோமா? இல்லையே? அப்படியிருக்க, இங்கு மட்டும் ஏன் பார்க்கிங் கட்டணம்?

காலை, மதியம் காட்சிக்கு கேண்டீனில் வியாபாரம் இல்லையென்றால் படத்தைத் தூக்கி விடுகிறார்கள்.கேண்டீனில் வியாபாரம் செய்வதற்கா தயாரிப்பாளர்கள் கஷ்டப் பட்டுப் படம் எடுக்கிறார்கள்?

தயாரிப்பாளர்கள் இவ்வளவு கஷ்டப் பட்டு படம் எடுக்கிறோம். ஆனால் காலைக் காட்சிக்குக் கூட முழுதாக கூட்டம் வருவதில்லை. ஆனால் அதில் நடித்த நடிகர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்கிறார். ஒரு காட்சியை கூட நிரப்ப முடியாத ஹீரோவுக்கு எதற்கு ஒரு கோடி சம்பளம்? இவை எல்லாமே மாறவேண்டும். ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை சதவீத அடிப்படையில் வாங்க வேண்டும். பக்கத்து மாநிலங்களில் அதுதான் நடக்கிறது. நடிகர்கள் முதலில் அதை செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு ஓடுகிற பஸ்சை நிறுத்தி திருட்டு விசிடி இருக்கா என்று செக் பண்ணுவது எந்த விதத்திலும் சரியல்ல. நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டாலே போதும்… சினிமா பிழைத்துக் கொள்ளும் என்றார்.

அவர் நேரடியாக விஷாலைதான் சொல்கிறார் என்பதை அங்கு வந்திருந்த ரசிகர்கள் நன்கு உணர்ந்து கொண்டார்கள். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாரோ விஷால்?

இவ்விழாவில் இயக்குநர்கள் வசந்தபாலன்,ஏ.வெங்கடேசன், ரவிமரியா, சமுத்திரக்கனி, டி.பி.கஜேந்திரன், ஐந்து கோவிலான், மாரிமுத்து, இப்படத்தை எழுதி தயாரித்து இயக்கியுள்ள இயக்குநர் இசக்கி கார்வண்ணன் ,ஒளிப்பதிவாளர்கள் செழியன், வீரக்குமார்,,நடிகைகள் நமீதா, சாக்ஷி அகர்வால், ‘பகிரி’ நாயகன் பிரபு ரணவீரன், நாயகி ஷார்வியா, ஆதிரா, ரேகாநாயர், படத் தொகுப்பாளர் அத்தியப்பன் சிவா, ‘ஹரிதாஸ்’ வசனகர்த்தா ஏ.ஆர் வெங்கடேசன். ஆகியோரும் கலந்துகொண்டனர்.

2 Comments
  1. Selva says

    நடிகர்கள் சம்பளத்தை குறைத்தால் திருட்டு விசிடி எடுக்கமாட்டாங்களா இல்ல காலை காட்சியில் கூட்டம் பொங்கி வழிஞ்சிரும்மா? இல்ல பார்க்கிங் எல்லா மால்களிலும் மற்றும் திரையரங்குகளிலும் இலவசமா ஆக்கிருவாங்களா? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறாரு.

    எனக்கு என்னமோ இவர் கால்ஷீட் கிடைக்காத கடுப்புல பேசினமாதிரி தெரியுது …..

    1. Ramamoorthy N says

      Aha enna oru tharkurithanamana karuthu? Nadikargal salary a kurachathan thayarippu selavu kuraichu padapottiyoda vilai kuraiyum, athai thodarnthu ticket vilai parking kattanam popcorn vilai ellam kuraiyum. Makkalum padam paakka theater kku varuvaanga. Ithu simple logic. Ithu kooda puriyama mokka thanama comment panniyirukeenga. Ticket vilai 350, parking 250, canteen selavu 500. 4-5 per konda oru kudumpam padam paakka agum selavu 2000 kurainthathu. Monthly sampalam vangum oruvan padam paakka 2000 selavu seyyanuma? Athukku pathila kodila samplam vangum nadigargal latchathil vanginaal avargal sotrukku thindadava pogirargal? Konjam yosikka sollungal. Neengalum than.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இந்தியாவின் வளத்தை பறிகொடுக்கிறார் மோடி! இயக்குனர் வசந்தபாலனின் துணிச்சல் பேச்சு

‘தமிழ்சினிமா எங்கே போய் கொண்டிருக்கிறது?’ என்றொரு கருத்தரங்கம் வைத்தால், ஒரு மாதமானாலும் அந்த கூட்டம் முடியாது போலிருக்கிறது! அவ்வளவு குமுறல்கள், வருத்தங்கள், வேதனைகள்! செய்வதறியாமல் தவியாய் தவித்துக்...

Close