சிவகார்த்திகேயனின் குட்புக்கில் இடம் பிடிக்கணும்! பிரபல தயாரிப்பாளர் தூண்டில்?

லாட்டரி சீட்ல கோடி ரூபா விழுந்த சந்தோஷம் வரணும்னா ‘ரஜினி முருகன்’ சொன்னபடி ரிலீஸ் ஆனா போதும்! இப்படி சிவகார்த்திகேயனை சுற்றியுள்ள சொந்த பந்தங்களும், சூழ்திருக்கும் நண்பர்களும், அவரது அதிதீவிர ரசிகர்களும் பொங்க வச்சு கிடா வெட்ற தவிப்போடு இருப்பதால் நாளுக்கு நாள் டென்ஷன் ஏறிக் கொண்டிருக்கிறது. ‘சொத்தை வித்தாவது படத்தை நான் வெளியிடுவேன். யாரும் அஞ்ச வேண்டாம்’ என்று பகிரங்கமாக அறிவித்தும் விட்டார் அப்படத்தின் தயாரிப்பாளரான லிங்குசாமி.

இந்த இக்கட்டான நேரத்தில், விருந்து சாப்பிட மண்டபத்துக்கு வந்தவரே தாலி கட்டவும் தயாரான கதையா, ‘ரஜினி முருகனின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமையை நான் வாங்கிக்கிறேன். நீங்க பிரச்சனையெல்லாம் முடிச்சுட்டு என்ஓசி வாங்கி தந்தா 45 கோடியை ஒரே பேமெண்ட்ல கொடுத்துர்றேன்’ என்கிறாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

அவரே வாங்குன கடனை கட்ட முடியாமல் பேங்க் ஜப்தியில் இருக்கிறார். அவருக்கு ஏது 45 கோடி என்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது. ஏனென்றால் உலக வங்கியிடம் கடன் வாங்கிதான் உள்நாட்டு அந்தஸ்தே சென்ட் வாசனையோடு திரியுது. நிலைமை அப்படியிருக்கும் போது சிவகார்த்திகேயன் படத்தை சொல்லியா பணம் புரட்ட முடியாது? இந்த படத்தை ரிலீஸ் செஞ்சுட்டா சிவகார்த்திகேயனின் குட் புக்ல இடம் பிடிக்கலாம். அப்புறம் கால்ஷீட்தான்… கலெக்ஷன்தான்… என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் அவர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பத்து லட்சம் இருந்தால் பாபி சிம்ஹா கால்ஷீட்?

கோடம்பாக்கத்தில் புது முகங்களின் படங்கள் அவ்வப்போது ஹிட்டடித்து வந்தாலும், பழைய பஞ்சாங்கத்தை படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடியே வருகிறது. எப்படி? காக்கா முட்டை என்றொரு படம்...

Close