ஈ காக்காய் கூட எட்டிப்பார்க்காத வியாபார ஷோ?

ஒரு மிகப்பெரிய ஹிட் படம் கொடுத்த ஒரு ஹீரோவுக்கு இன்றைய தேதியில் ஜீரோவுக்கான மரியாதை கூட இல்லை. இந்த பேரதிர்ச்சியில் இருந்து விடுபட முடியாமல் ஹீரோ தவியாய் தவித்து தண்ணீர் கூட குடிக்காமல் குப்புற படுத்துக் கிடப்பார் என்று நீங்கள் நினைத்தால், அங்குதான் ட்விஸ்ட். அன்றுதான் டபுள் பிளேட் பிரியாணியை வாங்கி உள்ளே இறக்கினாராம் அவர். ஹ்ம்ம்ம்… இப்படியும் ஒரு ஹீரோ.

போகட்டும்…. விஷயத்திற்கு வருவோம். ‘ஆதார்’ என்ற படம் கோடம்பாக்கத்தில் தயாராகி ஒன்றரை மாதத்திற்கும் மேலாகிவிட்டது. அங்காடி தெரு மகேஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மித்ரா குரியன் நடித்திருக்கிறார். முக்கியமான கேரக்டர் ஒன்றில் சமுத்திரக்கனியும் தலையை காட்டியிருக்கிறார். கடந்த வாரம் இப்படத்திற்கான மீடியேட்டர் ஷோ ஒன்றை ஏற்பாடு செய்திருந்ததாம் படக்குழு. அதென்ன மீடியேட்டர் ஷோ?

கோடம்பாக்கத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மீடியேட்டர்கள் இருக்கிறார்கள். பெரிய ஹீரோக்கள் நடித்த படங்கள் என்றால் சுலபமாக விற்றுவிடும். அடுத்த கட்ட ஹீரோக்கள் என்றால் அவர்களை அவர்களே மதித்துக் கொண்டால்தான் உண்டு. வேறு யாரும் இவர்களை ஒரு ஆட்டோகிராஃபுக்கு கூட மதிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட இவர்களின் படத்தை விற்று தரும் பொறுப்பை இந்த மீடியேட்டர்கள் எடுத்துக் கொள்வார்கள். விநியோகஸ்தர்களிடம், ‘அண்ணே… இது நல்ல படம்ணே. வாங்கி ரிலீஸ் பண்ணுங்க. கோலி சோடா மாதிரி கோடி கோடியா கலெக்ஷன் வரும்’ என்றெல்லாம் பில்டப் கொடுத்து பொய் பொய்யாக சொல்லி அவர்கள் தலையில் கட்டுவார்கள்.

இவர்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக திரையிடப்படும் ஷோதான் மீடியேட்டர் ஷோ. ஆதார் படத்திற்கும் அப்படியொரு ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏ.வி.எம். ஏ.சி திரையரங்கத்தில் ஷோவை ஏற்பாடு செய்துவிட்டு டைரக்டரும் தயாரிப்பாளரும் காத்திருக்க, ஒரு மீடியேட்டர் கூட அந்த பக்கம் வரவில்லையாம். இத்தனைக்கும் ஒவ்வொருவருக்கும் நேரிலும் போனிலும் பல முறை அழைப்பு விடுத்திருந்தார்களாம். கோடி கோடியாக கொட்டி படமெடுத்துவிட்டு கடைசியில் ஷோவையே கேன்சல் செய்துவிட்டு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது தயாரிப்பாளருக்கு.

தன் படத்திற்கு இப்படியொரு கதியா? என்று கவலைப்பட வேண்டுமல்லவா? அப்படத்தின் ஹீரோ மகேஷ் எவ்வித கூச்ச நாச்சமும் இன்றி, நாம் முதல் பாராவில் குறிப்பிட்டிருந்தபடி பொன்னுசாமி பிரியாணியை வெளுத்து கட்டினாராம். இப்படிப்பட்ட ஹீரோக்களை வைத்துதான் உப்புமா கிண்ட வேண்டியிருக்கு இங்கே?

அடுத்த பட ஷுட்டிங்கில அண்ணனுக்கு வான் கோழி முட்டைய வறுத்து தர முடியுமான்னு கேட்கிறாரு அவரோட மேனேஜர்! பதில் சொல்லுங்கப்பா…

1 Comment
  1. வாசகன் says

    அந்து பேட்டா,

    பொன்னுசாமி பிரியானிய உனக்கு வாங்கிக் கொடுக்கலேன்னு வயத்தெரிச்சல் தானே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நான் விலகிக்கிறேன்…! விக்ரம் கோபம்… விஜய் மில்டன் அதிர்ச்சி

பணம் என்றால் பிணமே வாயை திறக்கும் காலமிது. அப்படியிருக்க, சமானியர்கள் திறக்க மாட்டார்களா என்ன? விக்ரம் ஹீரோவாக நடிக்க, கோலிசோடா வெற்றிக்கு பின் விஜய் மில்டன் ஒரு...

Close