புலி படத்தை ஷேர் பண்ணினா ‘போலீச கூப்பிடுவேன்… ’ -கடும் கோபத்தில் சிம்பு தேவன்

இன்று அவசரம் அவசரமாக பிரஸ்சை சந்தித்தார்கள் புலி படத்தின் தயாரிப்பாளர்களும், அப்படத்தின் இயக்குனர் சிம்புதேவனும். என்னவாம்?

‘இதுவரை நாங்க அஃபிசியலா புலி படத்திலேர்ந்து ஒரு ஸ்டில்லையும் வெளியிடல. ஆனால் எங்கு பார்த்தாலும் அந்த ஸ்டில்கள் வருது. எப்படின்னு விசாரிச்சாதான் தெரியுது… நாங்க ஆரம்பத்துல இந்த படத்திற்காக நியமிச்ச டிசைனர் டினியுஜானின் வேலைதான் அதுன்னு!’ பொங்கி வரும் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு பேச ஆரம்பித்தார் சிம்புதேவன்.

‘ஆரம்பத்தில் நாங்க அவரை டிசைனரா நியமிச்சோம். அப்போது நிறைய ஸ்டில்கள் அடங்கிய ஹாட் டிஸ்க்கை அவரிடம் ஒப்படைச்சோம். அதற்கப்புறம் அவருடைய அணுகுமுறை பிடிக்காததால் நாங்க அவரிடமிருந்து விலகி வேறொருவர் மூலமா டிசைன் பண்ணிகிட்டு இருக்கோம். இந்த நேரத்தில் தொடர்ந்து சமூகவலைதளங்களில் விஜய்யின் புலி பட ஸ்டில்கள் தினம் ஒன்னா வெளிவருது. அவ்வளவும் நாங்கள் அவரிடம் கொடுத்த ஹாட் டிஸ்க்குல இருந்த ஸ்டில்கள். டினியூஜானிடம் கேட்டால், எங்கிட்ட மூணு பேர் வேலை பார்த்தாங்க. இப்போ அவங்க என்னிடம் இல்ல. அவங்க வேலையாதான் இருக்கும்னு சொல்றார். நாங்கள் சைபர் கிரைம்ல புகார் கொடுத்துருக்கோம்’ என்றார் வேதனையோடு.

இப்படி வர்றதும் பப்ளிசிடிதானே? விட்ற வேண்டியததானே என்றால், அங்குதான் இருக்கிறது இவர்களின் வேதனை. பல கோடிகள் போட்டு ஒரு பெரிய ஹீரோவை வச்சு ஒரு படம் எடுக்கும் போது, எந்த ஸ்டில்லை முதல்ல வெளியிடணும்? எந்த நேரத்துல வெளியிடணும் என்றெல்லாம் நாங்கள் ஒரு கணக்கு வச்சுருப்போம். இப்போ வர்ற ஸ்டில்கள் ஷுட்டிங்கில் ராவா எடுக்கப்பட்டது. எதையாவது ஒரு ஸ்டில்லை வெளியிடும்போது அதில் விஜய் சார் சற்று குனிந்து நின்றிருக்கலாம். இல்லேன்னா அவர் முகத்தில் லைட்டிங் போதாமலிருக்கலாம். இப்படி நிறைய பிரச்சனை இருக்கு. அதையெல்லாம் புரிஞ்சுக்காமல் இப்படி ஸ்டில்களை வெளியிடறது நல்லாயில்ல. இதை சம்பந்தப்பட்டவங்க புரிஞ்சுக்கணும் என்றார் சிம்புதேவன்.

அப்படின்னா இந்த ஸ்டில்களை பேஸ்புக் ட்விட்டர்களில் ஷேர் பண்ணியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீங்களா? என்று கேட்டால், சைபர் க்ரைம்ல புகார் கொடுத்துருக்கோம். அப்படி ஷேர் பண்ணினா அவங்க மேலயும் நடவடிக்கை பாயும் என்றார்.

‘புலி’ன்னாலே பாயத்தானே செய்யும்?

முக்கிய சந்தேகம்- ஆமா… இந்த செய்திக்கு எந்த ஸ்டில்லை வைப்பதாம்? புரியலையே ப்ரோ…!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிட்டிக்குள்ளேயே லேண்ட் தருவோம்! விக்ரமன் அறிவிப்பால் ஏழை இயக்குனர்கள் ஜில்!

சில தலைமையின் கீழ் சங்கங்கள் இயங்கும்போதுதான் அதை பொற்காலம் என்பார்கள் உறுப்பினர்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இராம.நாராயணன் இருந்தபோது அதை பொற்காலம் என்றார்கள். அதற்கப்புறம் இன்றுவரை அங்கே குடுமிப்பிடியும்,...

Close