கூச்சமா இருக்கு! புன்னகைப் பூ கீதாவை தவிக்க விட்ட விமல்

அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற படங்களை தயாரித்தவர் புன்னகைப்பூ கீதா. மலேசியாவில் இயங்கி வரும் வானொலி ஒன்றின் ஆர்.ஜேவாக இருக்கும் கீதாவுக்கு, தமிழ் படங்களை தயாரிக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் இல்லை. நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் வந்திருக்கிறது. ஒரு வகையில் பார்த்தால் அதற்கு தகுதியானவரும் கூட. வசீகரமான முகம், வளமான குரல், அசரடிக்கும் உயரம் என்று இந்த கால ஹீரோயின்களுக்கு இம்மியளவும் குறைச்சல் இல்லாதவர்தான் அவர்.

முதலிரண்டு படங்களை தயாரிக்கும்போதெல்லாம் அவருக்கு அந்த ஆசை வரவில்லை போலும். அதற்கப்புறம் அவர் தயாரித்த நர்த்தகி படத்தில் ஒரு நிருபராக நடித்திருந்தார் கீதா. தனது புன்னகை மீது அவருக்கே நம்பிக்கை வந்திருக்க வேண்டும். அதற்கப்புறம்தான் முழு நேர ஹீரோயினாக நடிக்கலாம் என்று நினைத்திருப்பார் போலும். சமீபத்தில் அவர் தயாரிப்பில் விமல் ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றை டிசைன் செய்தார்கள்.

முன் தயாரிப்பு பணி நேரத்திலேயே இந்த படத்தில் நானே ஹீரோயினா நடிக்கிறேன். அதுவும் விமலுக்கு ஜோடியா என்று கேட்டாராம் புன்னகைப்பூ. பருத்தி பூ புடவையாகவே காய்க்கிறதே, ரொம்ப சுலபம் என்று நினைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால்…?

படத்தின் ஹீரோவான விமல், ஏங்க… ஒரு தயாரிப்பாளர்ட்ட கை நீட்டி பணம் வாங்கிட்டு அவரையே கட்டிப் புடிச்சு நடிக்கறதுன்னா கூச்சமா இருக்குங்க. உங்களுக்கு பதிலா யாரை வேணும்னாலும் சொல்லுங்க. கட்டிப்புடிச்சு டூயட் பாடுறேன் என்றாராம். எனவே கீதாவின் ஹீரோயின் ஆசை அப்பளம் போல நொறுங்கிவிட்டது. யாராவது லாஜிக் பார்க்காத ஹீரோவா இருந்தா ட்ரை பண்ணி பாருங்க கீதா!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சினிமாவுக்கு எந்த அரசாங்கமும் நல்லது செய்யல… கமல் பரபரப்பு பேச்சு!

கண்ணா லட்டு திங்க ஆசையா? படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே குரூப் (நடிகர் நடிகைகள் மட்டும்தான், தயாரிப்பாளர் வேறு, இயக்குனரும் வேறு) மீண்டும் அதன் செகன்ட்...

Close