ரஜினி, விஜய் தவிர எல்லாரும்தான் கெட்ட வார்த்தை பேசுறாங்க! சிம்புவுக்கு ஆதரவாக ராதிகா கொடி!

வேடிக்கை பார்த்தவன் வேட்டியிலேயும் வெத்தலப் பாக்கு எச்சின்னு ஆகிவிடும் சில விமர்சனங்கள். அப்படிதான் ஆகிவிட்டது ராதிகா சரத்குமாரின் சிம்பு சப்போர்ட் விவகாரமும்! ஒரு டேஷ் பாடலை பாடிவிட்டு, அப்பளம் போல நொறுங்கிக் கிடக்கிறார் சிம்பு. போலீஸ் தேடுவதாக ஒரு புறம் சொல்லப்பட்டாலும், அதெல்லாம் ஒண்ணுமில்லங்க. அவர் வீட்லதான் ஜம்முன்னு இருக்கார் என்கிறது இன்னொரு தகவல். அவர் கைதுதான் இப்போது பிரச்சனையா என்பதையெல்லாம் தாண்டி, இந்த விவகாரம் வேறொரு திசைக்கு இழுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

முதலில் இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் என்ன பண்ணுது என்று கேள்வி கேட்ட நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், தற்போது சிம்பு செய்தது மன்னிக்கக் கூடிய தவறுதான். அதை இவ்வளவு பெருசுபடுத்த தேவையில்லை என்று கூறிவிட்டார். இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவரது மனைவி ராதிகா, சற்று ஸ்டிராங்காகவே சிம்புவுக்கு சப்போர்ட் செய்திருக்கிறார்.

ஒரு தவறான வார்த்தையை அவர் பாடல்ல பயன்படுத்தினார் என்பது தப்புதான். ஆனால் சினிமாவில் நிறைய ஹீரோக்கள் கெட்ட வார்த்தை பேசி, அது சென்சாரில் அனுமதிக்கப்பட்டும் வந்திருக்கு. எனக்கு தெரிஞ்சு, ரஜினி, விஜய் தவிர மீதி எல்லா ஹீரோக்களுக்கும் சினிமாவில் கெட்ட வார்த்தை பேசியிருக்காங்க. சிம்புவை இந்தளவுக்கு ஒரு தீவிரவாதி போல சித்தரிப்பது அவசியம்தானா என்பதுதான் என்னோட கேள்வி என்று கூறியிருக்கிறார்.

இதையெல்லாம் கூட விடுங்கள். ஒரு படத்தில் ஒரு வசனம் வரும். ‘பொறி இங்க இருக்கு. வடை இங்க இருக்கு. எலி எங்கடா?’ என்று. சிம்பு விஷயத்திலும் அந்த கேள்வியைதான் எழுப்ப வேண்டியிருக்கிறது. பாட்டு யூ ட்யூப்ல இருக்கு. பாடிய சிம்புவும் இங்கதான் இருக்கார். அதை லீக் பண்ணியவன் எங்கே இருக்கான்? அட்டாக் பாண்டியவே கைது பண்ணிய போலீசுக்கு, அந்த லீக் ஆசாமியை பிடிப்பது அவ்வளவு கஷ்டமா என்ன?

1 Comment
  1. oo says

    in vijay movie with reema sen, vijay says sunni and says why she is driving asingamana vandi (pointing to the sunny that reema sen is driving)

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பட்டயக் கிளப்பும் தாரை தப்பட்டை பாடல்! எவர் ‘ ரெய்ன் ’ இளையராஜா!

இளையராஜாவின் ஆயிரமாவது படம்! பட்டன் மட்டுமல்ல, சட்டையே தங்கமாய் ஜொலிக்கும் போலிருக்கிறது!! மிக பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்த ‘தாரை தப்பட்டை’ பாடல் வெளியீட்டு விழா,...

Close