மத்தியில் நடப்பது இந்துத்வா அரசுதான்! ஆனால்? ராஜ்கிரண் வேதனை!

சினிமாவில் சமூக நீதிகாத்த வீரர்களாக நடிக்கும் பலர், நிஜத்தில் தினத்தந்தி பேப்பரை கூட புரட்டியிருக்க மாட்டார்கள். கொடுத்த டயலாக்கை உணர்ச்சியோடு பேசிவிட்டு போவதோடு சரி. அதன் உள்ளர்த்தம் குறித்த தேடலும் இருக்காது. ஆனால் ராஜ்கிரண் அப்படிப்பட்டவரல்ல என்பதை நேற்று அவரது வேதனை குரலும், விசும்பலும் வெளிச்சம் போட்டு காட்டியது.

சிவப்பு என்ற படத்தின் பத்திரிகையாளர் ஷோ. படம் முடிந்தபின் நிருபர்களிடம் பேசிய ராஜ்கிரண், இலங்கை தமிழர்கள் அந்த நாட்டில் படும் இன்னல்களை கண்ணீர் மல்க நினைவுகூர்ந்தார். ஒரு கட்டத்தில் வெடித்து அழவே ஆரம்பித்துவிட்டார்.

“போற இடமெல்லாம் விரட்டப்படும் இலங்கை தமிழர்கள் நம்ம தாய் மண் என்று நினைத்து தமிழ்நாட்டுக்கு வர்றாங்க. இங்கேயும் அவங்களை விரட்டினால், அவங்க எங்கதான் போவாங்க?” இதுதான் இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் மையக்கருத்து. இது குறித்து பேசிய ராஜ்கிரண், “விடுதலைக்காக போராடிய பிரபாகரன் செத்துட்டார். ஆனால் 25 வருஷம் கழிச்சு கூட ஒரு பிரபாகரன் வந்துடக் கூடாது என்று இலங்கை அரசு சிங்களவனை விட்டு என் தமிழ் பெண்களை வன்புணர்வு செய்யுது. எல்லாரையும் பறிகொடுத்த தமிழச்சி, மகனை காப்பாற்றவும் ஒரு வேளை சோத்துக்கும் விபச்சாரம் பண்றா. (இதை சொல்லும்போது வாய்விட்டு அழுதார் ராஜ்கிரண்)

போர்க்குற்றம் பற்றிய விசாரணையை இலங்கை அரசே நடத்தலாம்ங்கிற தீர்மானத்துல இந்தியா கையெழுத்துப் போடுது. ஆயிரக்கணக்கான கோவில்களை குண்டு போட்டு அழித்த ராஜபக்சே திருப்பதி கோவிலுக்கு வர்றான். இந்துத்வா கொள்கையை பின்பற்றுகிற மத்திய அரசு அதே ராஜபக்சேவுக்கு பாதுகாப்பு கொடுக்குது. இனி இந்த நாட்டில் இலங்கை தமிழர்களின் வேதனையை நேரடியாக சொல்கிற படத்தை யாரும் எடுக்க முடியாது. அதுக்கு இந்தியாவின் வெளியுறவு கொள்கை அனுமதிக்காது. அதனால், வேறு வகையில்தான் மக்களுக்கு உணர்த்த வேண்டியிருக்கு. இந்த படம் அப்படிப்பட்ட படம். அந்த கருத்துக்காகவாவது பத்திரிகையாளர்கள் இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லணும் என்றார் ராஜ்கிரண்.

இப்படத்தின் கோனார் என்ற உணர்ச்சிமிகு கேரக்டரில் நடித்திருக்கிறார் அவர்.

Read previous post:
மீண்டும் கேப்டன் மகன்? குழம்பும் கோடம்பாக்கு!

இப்போதெல்லாம் கூட்டம் கூட்டமாக வருகிற போன் கால்களுக்கு கூட்டம் கூட்டமாக மரியாதை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் உதவி இயக்குனர்கள். “கேப்டன் மகன் சண்முவபாண்டியன் நெக்ஸ்டும் ஹீரோவா நடிக்கிறார். கதை...

Close