மாவட்ட ரசிகர் மன்ற தலைவர்களுடன் சந்திப்பு… மகளின் ஆசைக்கு ரஜினி இசைவு?

எதையும் தாங்குவேன் தங்கைக்காக… நான் இதையும் தாங்குவேன் அன்புக்காக… என்றொரு பாடல் டி.எம்.எஸ் குரலில் கம்பீரமாக ஒலித்ததை கேட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட நிலையில்தான் இருக்கிறாராம் சூப்பர் ஸ்டார் ரஜினியும். ஏன்? அது கடைசி பாராவில்.

அதற்கு முன் தனது ரசிகர்கள் பற்றி ரஜினி ஜெயா தொலைக்காட்சியில் அளித்த பேட்டியை ஒருமுறை கேட்க வேண்டும். தன் மீது உயிரையே வைத்திருக்கும் ரசிகர்கள் பற்றி ரொம்பவே உருக்கமாக பேசினார் ரஜினி. அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அல்லவா? அந்த நேரத்தில் ரசிகர்களின் பிரார்த்தனை பற்றி பேச ஆரம்பித்தார் ரஜினி.

‘எனக்கு இவங்கள்லாம் இந்த அளவு ப்ரே பண்ணிக்கிட்டிருக்கான்னு தெரியாத நிலைமையில இருந்தேன். ராமச்சந்திராவிலிருந்து சிங்கப்பூர் போறப்போ, ஃபேன்சுக்கு ஏதாவது சொல்லணும்னு சொன்னப்போ… என் வாய்ஸ் சரியா இல்ல. இருந்தாலும் அப்ப நான் சொன்னேன்… நான் வந்திடறேன். நீங்கள்லாம் பெருமைப்படற அளவுக்கு ஏதாவது செய்வேன்னு நான் சொன்னேன். இந்த கோச்சடையான் மூலம் என் ரசிகர்களை நான் பெருமைப்படுத்தறதா நினைக்கிறேன். அதுக்கப்புறம் ரசிகர்கள் எனக்காக செய்ததையெல்லாம் பேப்பர்ஸ், மேகஸின்ஸ், டிவி எல்லாத்தையும் பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்’.

‘இதுக்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியல. நான் அப்பவே சொன்னேன்.. பணத்துக்காக நடிச்சேன்னு. என் மேல இவ்வளவு அன்பு செலுத்தறாங்களே, இவ்வளவு செய்யறாங்களே.. இவங்களுக்கு என்ன செய்ய முடியும்னு நினைப்பேன். சில சமயம் எனக்கு அவங்களைப் பார்க்கும்போதெல்லாம் வெட்கமா இருக்கும். உங்களுக்காக மண்சோறு சாப்பிட்டேன், நாப்பது நாள் நடந்து போனேன்னு சொல்லும் அவங்களுக்கு நன்றின்னு சொல்றது ரொம்ப சின்ன வார்த்தை. ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க, பண்ணீங்கன்னு கேட்டுக்குவேன். இதெல்லாம் விவரிக்கவே முடியாத விஷயம். இதையெல்லாம் நான் உயிருள்ள வரைக்கும் மறக்க முடியாது. மறந்தா மனுஷனே கிடையாது. இதுக்கு கைம்மாறா என்ன செய்யப் போறேன்னு இன்னும் எனக்குத் தெரியல…’

இதுதான் ரஜினியின் பதில். இப்போது முதல் பாராவுக்கு வருவோம். கோச்சடையான் ரிலீசுக்கு முன்பாக தமிழகம் முழுவதுமிருக்கிற ரசிகர்களின் உதவி வேண்டும் என்று நினைக்கிறாராம் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின். அதற்காக அவர் அப்பாவிடம் ஒரு கோரிக்கை வைத்திருப்பதாக கூறுகிறார்கள். அதாவது, ரிலீசுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு மாவட்ட ரஜினி மன்ற தலைவர்களை மட்டுமாவது நேரில் அழைத்து அவர்களுடன் நீங்க போட்டோ எடுத்துக்கணும் என்கிறாராம்.

இதற்கு ரஜினியும் சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது.

Read previous post:
என் புருஷனை துன்புறுத்தாதீங்க… பதறிய தேவயானி

‘எழுதி வச்சுக்கங்க... இந்த படம் 100 நாள் ஓடும் ஓடும்... ஓடியே தீரும்...’ என்று தான் இயக்கிய ‘திருமதி தமிழ்’ பட நேரத்தில் பல்லை கடித்துக் கொண்டு...

Close