ரஜினி போன்! வரலட்சுமி ஆஹா ஒஹோ

தாரை தப்பட்டையின் ஒரே நிம்மதி வரலட்சுமிதான் என்றாகிவிட்டது. ரசிகர்களும் சரி, பாதியில் எழுந்தோடி வந்த தாய்குலங்களும் சரி, ‘அந்த பொண்ணு நடிப்பு டாப்புப்பா…’ என்று சர்டிபிகேட் கொடுத்துவிட்டார்கள். (படம் பார்த்த விஷால் மட்டும்தான் சற்றே அப்செட் என்கிறது நிஜ நிலவரம்) ஊர் உலகம் பாராட்டினாலும், ஒருவர் கூட, கால்ஷீட் வேணும். கதவ திறம்மா என்று வரணும் அல்லவா? ம்ஹும்… இந்த நிமிஷம் வரைக்கும் வரலட்சுமிக்கு அப்படியொரு ராங் கால் கூட வரவில்லை. இதெல்லாம் ஒரு புறம் அவரை உஷ்ணமடைய வைத்தாலும், உச்சந் தலையில் ஐஸ் கட்டி விழுந்த மாதிரி ஆக்கியது ஒரு கால்!

மேற்படி கால் பிரம் சூப்பர் ஸ்டார் ரஜினி. தனது வீட்டிலேயே சிறப்பான ஒரு ஹோம் தியேட்டர் வைத்திருக்கும் ரஜினி, பிரத்யேகமாக இந்த படத்தை திரையிட்டு பார்த்தாராம். பார்த்த கையோடு வரலட்சுமிக்கு போன் அடித்துவிட்டார். இந்த சந்தோஷ செய்தியை அவர் போன் செய்து வைத்த அடுத்தடுத்த நிமிஷங்களிலேயே ட்விட்டரில் போட்டு உலகத்துக்கு அறிவித்துவிட்டார் வரு. “Oh my god..in 7th heaven..Jus got a cal from The Super Star himself @superstarrajini..Thnk u sir for the appreciation.. Feels amazing..wohoo” இதுதான் வருவின் ட்விட்.

இன்னுமாய்யா ஒருத்தரும் புதுப்படத்துல வரலட்சுமியை கமிட் பண்ணல? அட… உங்களையெல்லாம் தூக்கி தாரை தப்பட்டை ஓடும் தியேட்டர்லதான் வச்சு அடைக்கணும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Aarathu Sinam Movie Stills

Close