யாருய்யா இந்த எம்பர்சியா? அடுத்த படத்துல ரஜினிக்கு ஜோடியா போட்டு அமுக்கு!

மேலேயிருக்கிற படத்திலிருப்பவர் எம்பர் சியா. மலேசியாவின் பிரபல விளம்பர அழகிகளில் ஒருவர். இவரை அழைத்துச் செல்லவும், ரஜினியை அழைத்துச் செல்லவும் ஒரே சொகுசு காரை ஏற்பாடு செய்ததால் வந்த விபரீதத்தை நாம் ஏற்கனவே செய்தியாக வெளியிட்டிருந்தோம். https://www.newtamilcinema.in/police-complaint-in-malaysia/ தற்போது சம்பந்தப்பட்ட அந்த மாடல் அழகியே இந்த விவகாரம் தொடர்பாக மனம் திறந்திருக்கிறார்.

அதற்கு முன் நடந்தவற்றில் விட்டுப்போன அநியாயம் ஒன்று. மலேசிய பத்திரிகைகளில் சில, மாடல் அழகியை ஏற்றிச் செல்ல வேண்டிய காரை ரஜினிகாந்த் கடத்தி சென்றுவிட்டதாக செய்தி வெளியிட்டிருந்தன. (உஙகளுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாய்யா?) தனக்கான கார் வரும் வரும் என்று காத்திருந்த எம்பர்சியா, வெகு நேரம் காத்திருந்து அதற்கப்புறமும் வந்து சேராததால் போக வேண்டிய நிகழ்ச்சிக்கு வேறொரு காரில் சென்று சேர்ந்தாராம்.

ரஜினி முக்கியமா, எம்பர் சியா முக்கியமா என்பதெல்லாம் இப்போதைக்கு முக்கியமான கேள்வியில்லை. ஏனென்றால், சிலருக்கு ரஜினியும் இன்னும் சிலருக்கு எம்பர்சியா முக்கியமாகவும் இருந்திருக்கலாம். ஆனால் காரை வாடகைக்கு தந்த நிறுவனம், மாடல் அழகியிடம், வண்டி பஞ்சர், பெட்ரோல் டேங்க்ல ஓட்டை என்று ஏதேனும் காரணம் சொல்லி அவரை வேறொரு காரில் பிக்கப் செய்திருந்தால் பிரச்சனையே இல்லை. அவர்களும் கப்சிப் என்று இருந்துவிட, அதற்கப்புறம் வந்ததே கலகம்.

தன்னை விழாவுக்கு அழைத்தவர்களை லெப்ட் ரைட் வாங்கிவிட்டாராம் அழகி. அந்த கோபத்தை அப்படியே அவர்கள் கார் கம்பெனியிடம் வைக்க, அவர்கள் போலீசுக்கு போய்விட்டார்கள். இவ்வளவு களேபரத்திற்கு பிறகு இப்போதுதான் வாயை திறந்திருக்கிறார் எம்பர்சியா.

“எனக்கான காரில் நடிகர் ரஜினி செல்வதை அறிந்ததும், எனக்கு கோபம் வரவில்லை. பரவாயில்லை என்றே நினைத்தேன். ஆனால் எனது பயண முகவர் இதுகுறித்து முன்கூட்டியே எனக்குத் தெரியப்படுத்தி இருக்க வேண்டும். நான் பயணம் செய்ய வேண்டிய காரை பிரபல பிரமுகர் ஒருவர் வலிய எடுத்துச் சென்று விட்டதாக கூறப்பட்டபோது, அவர் (ரஜினி) அப்படிச் செய்திருக்க மாட்டார் என நினைத்தேன். நடிகர் ரஜினியை நான் பெரிதும் நம்புகிறேன், மதிக்கிறேன். அவர் யாருக்கும் இப்படியொன்றை செய்ய மாட்டார்,” என்று கூறியிருக்கிறார் எம்பர் சியா.

வியட்நாமில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் கடந்த திங்கட்கிழமை நாடு திரும்பியிருந்தார் எம்பர் சியா. பின்னர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மாலை சுமார் 6.15 மணி முதல் இரவு 8.20 மணி வரை தன்னை அழைத்துச் செல்லும் என்று கூறப்பட்ட அந்த சொகுசுக் காருக்காக காத்திருந்தாராம். ஏனெனில் அந்தக் காரில் சென்று, முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்க இருந்தார். நிகழ்ச்சி நிரலின்படி, அவர் ஆடம்பர சொகுசுக் காரில் வந்திறங்க வேண்டும், அதை படம்பிடிக்க வேண்டும் என்பதே ஏற்பாடு. எனவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தனக்கான காரை அலங்கரிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக சியா கருதியுள்ளார். இதனால் 2 மணி நேரம் விமான நிலையத்திலேயே அவர் பொறுமையாகக் காத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

யாருய்யா அந்த எம்பர்சியா? அடுத்த படத்துல ரஜினிக்கு ஜோடியா போட்டு அமுக்கு!

Read previous post:
சிக்கிக்கு சிக்கிக்கிச்சு- விமர்சனம்

ஒடும் ரயிலில் ஒரு காதல்! அந்த தண்டவாள சத்தத்திற்கு நடுவே ஒரு வண்டவாள சேசிங்! கூட்டிக் கழித்தால் சிக்கிக்கு சிக்கிக்கிச்சு படம்! ஒருதலைராகம் காலம் தொடங்கி, இந்த...

Close