ரஜினி 10 கோடி வெள்ளநிதி? அள்ளிவிடுகிறதா ஆங்கில ஊடங்கள்?

இன்று பிற்பகலில் இருந்தே பெரும் பரபரப்பு! ரஜினி வெள்ள நிவாரண நிதியாக பத்து கோடி ரூபாயை தமிழக அரசுக்கு அளிக்கவிருப்பதாக பெங்களூரை சேர்ந்த ஆங்கில ஊடங்களும் டி.வி 9 சேனலும் செய்திகளை வெளியிட்டதுதான் அந்த பரபரப்புக்கு காரணம். இந்த கொடூரமான வெள்ளம், மக்கள் அவதி, உயிரிழப்பு இது பற்றியெல்லாம் ரஜினி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஆறுதலும் கூறவில்லை. ஆனால் அவர் தன் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட வேண்டாம் என்று கூறியிருப்பதாக மட்டும் செய்திகள் வந்தன.

ரஜினி பத்து லட்சத்தை தன் ராகவேந்திரா ட்ரஸ்ட் மூலம் அளிக்க சொல்லிவிட்டு வெளியூர் கிளம்பிவிட்டார். “பொதுவாக பணத்தை கையாளுகிற விஷயத்தில் ரஜினி வீட்டில் மீனாட்சி ஆட்சி என்பதால், அவரால் எந்த முடிவும் திடுதிப்பென்று எடுத்துவிட முடியாது! அவரென்ன செய்வார் பாவம்…” என்று திரையுலக பிரமுகர்கள் சிலர் விமர்சித்து வந்த நேரத்தில்தான் இப்படியொரு செய்தி.

இந்த செய்தியை ரஜினி தரப்பிலிருந்து யாரும் உறுதிப்படுத்தவில்லை என்பதால், அவரை திட்டமிட்டு நெருக்கடிக்கு ஆளாக்குகிறார்களோ என்ற எண்ணமே வருகிறது. ஆனால் எதுவாக இருந்தாலும், ரஜினியை உரிமையோடு கேட்கிற இடத்தில் தமிழ்நாடு இருப்பதால் அவரால் சும்மா இருந்துவிட முடியாது என்பதுதான் இப்போதைய நிலைமை!

Read previous post:
ACTRESS DIMPLE CHOPDA HOT STILLS

Close