இதோ ரஜினியே வந்துட்டாரே….!

நல்லவேளை… எலக்ஷனுக்கு முன்பு ரஜினி தனது ட்விட்டர் அக்கவுன்ட்டை துவங்கியிருந்தார் என்றால், தேர்தல் தினத்தன்று மட்டும் ‘தலைவா எதையாவது சொல்லு…’ என்று லட்சக்கணக்கான மெசேஜ்களை அனுப்பி அவரை திணறடித்திருப்பார்கள் ரசிகர்கள். இப்போது துவங்கியிருக்கிறார். அவரே வீடியோ கேமிரா முன் தோன்றி தனது ட்விட்டர் விஜயத்தை தெரிவித்திருப்பதே செம ஸ்டைலாக இருக்கிறது. கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்தால் அதை நீங்கள் ரசிக்கலாம்.

Salutation to the Lord. Vaṇakkam aṉaivarukkum !! A big thank you to all my fans. Excited on this digital journey http://goo.gl/hyuvZx

வினாடிக்கு வினாடி அவரை ட்விட்டரில் பின்பற்றும் கூட்டம் உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. ரசிகர்களின் ஆர்வத்தை சுண்டி விட்டிருக்கும் ரஜினி அதை வெறும் ஒருநாள் திருவிழாவாக நிறுத்தி விடாமல் தொடர்ந்து ட்விட்டரில் பயணிக்க, நமது வாழ்த்துக்கள்.

Read previous post:
முதன்முறையாக சக பாடலாசிரியரை பாராட்டிய வைரமுத்து! அதிசயம்… ஆனால் உண்மை!

தனது பிள்ளைகள் மதன் கார்க்கி, கபிலன் தவிர வேறு எந்த தமிழ் பட பாடலாசிரியர்களையும் ஒரு பொருட்டாகவே கருத மாட்டார் வைரமுத்து. இதற்கு உதாரணமாக பல்வேறு சம்பவங்களை...

Close