காவியின் தூதுவனா ரஜினி? பாரதிராஜா மீது ரசிகர்கள் ஆத்திரம்!
ஆரம்பத்திலிருந்தே இயக்குனர் பாரதிராஜா ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தமிழனை தமிழன்தான் ஆள வேண்டும். இவர் கன்னடர் என்கிற சீமானின் கருத்தை, கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கிறவர்களில் முதல் நபராக இருக்கிறார் பா.ரா.
இந்த நிலையில் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதற்கு ரஜினி ரசிகர்கள் நாக்கை பிடுங்கிக் கொள்வதை போல கேள்வியும் கேட்டு வருகிறார்கள். முதலில் அவரது அறிக்கை. இந்த செய்தியின் கடைசியில் ரஜினி ரசிகர்களின் கேள்வி.
எது வன்முறையின் உச்சக்கட்டம் ரஜினி அவர்களே அறவழியில் போராடிய தமிழர்கள் உங்களுக்கு வன்முறையாளர்களா? தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் பேசும் பேச்சு இது. தங்களுடைய திரைப்படம் வெளியாகும்போது மட்டும் பூச்சாண்டி காட்டும் உங்களை போன்ற நடிகரை தமிழ் திரையுலகம் இதுவரை கண்டதில்லை. தமிழர்கள் கொட்டி கொடுத்த பணத்தில் தமிழர்களின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?. இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் நியூட்ரினோ மற்றும் மீத்தேனுக்கு எதிராகவும் வாய் திறந்தீர்களா?
எதற்கும் வாய் திறக்காத நீங்கள் தற்போது தமிழர்கள் ஒன்றிணைந்ததும் இதனை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்கிறீர்களே. இப்போதுதான் பட்டவர்த்தனமாக தெரிகிறது நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடகா காவியின் தூதுவன் என்று. உங்கள் வேஷம் மெல்ல கலைகிறது. காவிரி பிரச்னை பற்றி எரிந்த போது சேதமடைந்தது எங்கள் தமிழர்கள்தான். அங்குள்ள கலைஞர்கள் எல்லாம் ஒன்றுகூடி எதிர்க்குரல் கொடுத்தபோது வாய் திறக்காத நீங்கள் தமிழகத்தில் இருந்து கொண்டு எங்களை வன்முறையாளர்கள் என பட்டம் சுமத்துகிறீர்கள். எங்களுக்குள் நீங்கள் சிண்டு முடிய வேண்டாம். பேசும்போது எதை பேசுகிறோம் என உணர்ந்து பேசுங்கள் இல்லையெனில் தமிழ் மக்களால் நீங்கள் ஓரங்கட்டப்படுவீர்கள். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை
ரைட்… பாரதிராஜாவின் அறிக்கையை படித்துவிட்டீர்களா? இதற்கு ரஜினி ரசிகர்களின் ரியாக்ஷன் கீழே-
16 வயதினிலே உள்ளிட்ட பல படங்களை தமிழ்நாட்டில் மட்டுமே ரிலிஸ் செய்திருக்கலாமே பாரதிராஜா அவர்களே , உங்கள் படத்திற்கு வருமானம் கிடைத்தபோது கர்நாடகா பகையாக தெரியவில்லை அப்படிதானே…
IPL கொண்டாட்டம் கூடாது என்றீர்கள் , நேற்று விஜயகாந்த் சினிமாவில் 40 வது ஆண்டுவிழா கொண்டாடினார்களே , வீரமாக பேசிய சத்தியராஜ் கூட கலந்துகொண்டாரே , அதை ஏன் எதிர்க்கவில்லை…
தங்களின் மருமகள் யார்? உங்கள் குடும்பமே ஒரு இனமாக இல்லாத போது , அவரை இவ்வளவு இனம் பார்த்து பேசியுள்ளீரே , முதலில் உங்கள் மகனை விவகாரத்து செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம் .
பீல்டு அவுட் ஆனவுடன் இதே கன்னடரிடம் சென்று கெஞ்சி ஒரு பட வாய்ப்பு வாங்கும்போது தெரியவில்லையா , இல்லை அந்த படத்திற்கு அம்சலேகா என்கிற கன்னடரை இசையமைப்பாளராக போட்டபோது தெரியவில்லையா
கடந்த வருடம் பாரதிராஜா சினிமா இன்ஸ்டியுட் தொடங்கியபோது , ரஜினியுடன் செல்ஃபி எடுத்து பல்லிளித்தபோது தெரியவில்லையா ரஜினி கர்நாடகா என்று…
வீர வசனமெல்லாம் பிறகு பேசலாம் , முதலில் உங்களால் தூண்டப்பட்ட IPL போராட்டத்தால் சிறையில் இருக்கும் இளைஞர்களை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை , சீமான் தனியாக புலம்பிக்கொண்டு இருக்கிறார் , ஆனாலும் இப்படி சந்தர்ப்பவாதியாக இருக்காதீர்கள்…
இனி பாரதிராஜா என்கிற இயக்குநருக்கு மட்டுமே மரியாதை , இன துவேசம் செய்யும் , ஜாதி வெறி பிடித்த இந்த மனிதருக்கு அல்ல…
உங்களால் வாங்குன காசுக்கு எவ்ளோ அறிக்கை விட முடியுமோ விடுங்க பாத்துக்கலாம்..
கண்டிப்பாக நீங்கள் வன்முறை கூட்டம் தான்.அதில் சந்தேகம் இல்லை. உங்கள் திரைப்பட நிறுவனத்தை ஏன் ரஜினியே வைத்து திறந்தீர்கள்…? சுயநல விளம்பரம் தான் காரணம். காவேரி போராட்டம் முடியும் வரை உங்கள் படங்களை தமிழகத்தில் திரை இடாதீர்கள். போராட்டத்தை திசை திருப்பி விடும். உங்கள் கூட்டம் மீதோ இல்லை உங்கள் மீதோ உங்கள் போராட்டம் முறையில மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
எல்லாத்துக்கும் திறந்தா அது வாய் இல்ல ….
இலங்கை போர் நடக்கும் பொது இப்போ குதிக்குற பாரதிராஜா , கரு பழனியப்பன் , அமீர் , தகர பச்சான் எல்லாம் என்ன சித்து கொண்டிருந்தார்கள் …
இவர்களுக்கு ரவுடிகளை கண்டிக்க துப்பில்லை … அஹிம்சாவாதி மேல் பாய்ந்து பிராண்டி தங்கள் அரிப்பை தீர்த்துக்கொள்கிறார்கள் ..
20 வருடத்துக்கும் மேலானது ஸ்டெர்லைட் பிரச்சனை … 10 வருடமானது சல்லிக்கட்டு பிரச்னை . NEET கொண்டு வந்து 6 வருஷம் ஆச்சுது … இவர்கள் தன்மானம் இவ்வளவு நாளாக டீ குடிக்க போய் இருந்ததா ? சலிக்கட்டுக்கு ஆர்டினன்ஸ் கொண்டு வந்து தடையை நீக்கியது எங்கள் அம்மா ஆட்சி .. ஆனால் அதையும் நம்பாமல் , அல்லது நம்ப விடாமல் , நயவஞ்சகமாக போராட்டத்தை நீடிக்க இதை போல ஒரு கூட்டம் காரணம் சொன்னது – இந்த ஆர்டினன்ஸ் செல்லாது என்று .. அதனால் தான் கலவரம் வந்தது .. ஆனால் பின்னர் என்ன ஆச்சு …ஆக ஆர்டினன்ஸ் செல்லாது என்று கிளப்பிவிட்டு கூட்டம் யார் .. அவர்களுக்கு என்ன வேண்டும் ? இந்த புதர்களை போல கலவரம் தன் அவர்கள் குறிக்கோள் ..
பொறுப்பாகவும் , கண்ணியமாகவும் , ஓட்டுக்காவன்றி உண்மையாக , நேர்மையாக சரியை சரி என்றும் தவறை தவறென்றும் சொல்லி வருபவர் ரஜினி ஒருவர் தான் ..
rajini nandri ketta baadukku support pannarathvida yen tamil inthai saarntha Barathirajavukku Support pannalam
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மக்கள் செல்வாக்கிற்கு முன், பாராதைராசா எல்லாம் ஒன்றும் இல்லை. மேலும், நெய்வேலியில் இருந்து கர்நாடகாவிற்கு இன்றும் மின்சாரம் செல்கிறது. பாரதிராசாவின் அன்றைய படுதோல்வி போராட்டம் ஒரு சினிமா வாய்ப்பு இல்லாத சுய விளம்பரம் தான். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் சென்னை உண்ணாவிரதம் தான் தமிழகம் முழுக்க ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. காவேரி பிரச்சனை இன்றளவும் தீராமல் இருக்க காரணமே, 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் அலங்கோல ஆட்சி தான். ஒட்டுமொத்த தமிழக மக்களின் அன்பும் ஆதரவும் என்றும் எப்பவும் தலைவர் ரஜினி அவர்களுக்கு தான் உள்ளது. எந்த ஒரு தமிழக பிரச்சனை என்றாலும், தமிழக மக்கள் அனைவரும் எதிர்ப்பார்ப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் கருத்தையும் குரலையும் தான். தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவோடு, தலைவர் ரஜினி அவர்கள் தமிழகத்தின் முதல்வர் ஆவதை எவனாலும் தடுக்க முடியாது.
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மக்கள் செல்வாக்கை கண்டு பயந்து தான், போனியாகாத அரசியல் வியாபாரிகள், தலைவர் ரஜினியின் மீது எரிந்து விழுகிறார்கள். யாரு என்ன சொன்னாலும், தமிழக மக்கள், தலைவர் ரஜினி மீது வைத்துள்ள அன்பும் என்றும் எப்பவும் மாறாதது. தமிழக மக்களின் நல்லாசியோடு, சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ்நாட்டின் முதல்வர் ஆவது நிச்சயம்.
அமீர் பாரதி ராஜா சீமான் தமிழ் நாட்டை சுடுகாடு ஆக்காமல் ஓயமாட்டார்கள் என நினைக்கிறேன் .. இளைஞர்களை தவறான பாதையில் வழி நடத்துகின்றனர் .
அதிலும் பாரதி ராஜா ரொம்ப ஓவரா பேசுறார். ஆயுதம் ஏந்துவாராம். இவரை நன்றாக சுளுக்கெடுக்க வேண்டும்…..
இந்த இயக்குனர் எல்லாம் மார்க்கெட்இழந்தவர்கள் இவர்களின் ஒரு படம் கூட ஓடுவதில்லை IPL நடந்தால் வசூல் பாதிக்கும் என கிளம்பிட்டாங்க
எது போராட்டம்? பீச் fulla கரண்ட் cut பண்ணாவோடனே தன் கையில் இருந்த செல்போன் எடுத்து வெளிச்சம் பாச்சி தோளோடு தோள் நின்ற பெண்களை தெய்வமா மதிச்ச ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு போராட்டம்.ஆனால் என்ன நடந்தது நேற்று? ஒரு கிரிக்கெட் மேட்ச் பார்க்க போன அப்பாவி மக்களை அடிச்சு, லைன்ல நின்ற பெண்களை அசிங்க அசிங்கமா பேசி, போலீலை வெறித்தனமா தாக்கி நடந்தது போராட்டம்
திராணி இருந்தால் காவேரி இருக்கும் பெங்களூருவை நோக்கி பேரணியை நடத்த சொல்லு.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எதிர்ப்பு இருப்பதாக காட்டிக்கொள்ளும் வயதரிச்சல் அரசியல்
வாதிகள்.யார் கரடியாக கத்தினாலும் ரஜினி அரசியலுக்கு வருவதை தடுக்க
முடியாது. அவரது அரசியல் கொள்கையையோ, நடவடிக்கையையோ விமர்சிக்கலாமே தவிர அவரை அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை
கிடையாது. ஊழல் அற்ற லஞ்ச லாவண்யம் அற்ற வெளிப்படை நிர்வாகம் தான், மனித புனிதர் ரஜினியோட ஆட்சிக்கொள்கை .
கொள்கையை வச்சி கொள்ளை அடிச்சவன் தான் அதிகம். இது தான் பொதுவான
அரசியல் கொள்கை. கொள்கை மாறவேண்டும் ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கு
தகுந்தபடி. மக்கள் நலன் பேணுவது மட்டுமே மாறாத கொள்கையாக இருக்க
வேண்டும். உங்க கொள்கையை வச்சி எவ்வளவோ பேருக்கும் நல்லது
செய்கிறீர்கள் ஆனால் எல்லாருக்கும் முடியாதே. கொள்கை ஒரு தடை அதை
உடைக்க வேண்டும்.
முதலில், உன்னை போல தமிழ் துரோகிகளை தமிழ்நாட்டை விட்டு விரட்டி அடிப்பார். உன்னை போல அடிமையாக இருக்க மாட்டார். காசு வாங்கி கொண்டு வாக்கை விற்பனை செய்ய மாட்டார். மொத்தத்தில் உன்னை போல அல்லாமல் ஒரு நல்ல குடிமகனாக தமிழனாக சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் சிறப்பாக ஆட்சி செய்வார்